Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோடை முடிந்தும் கொளுத்தி எடுக்கும் வெயில்; 10 இடங்களில் 100 சதமடிப்பு

கோடை முடிந்தும் கொளுத்தி எடுக்கும் வெயில்; 10 இடங்களில் 100 சதமடிப்பு

By: Nagaraj Mon, 15 June 2020 5:15:59 PM

கோடை முடிந்தும் கொளுத்தி எடுக்கும் வெயில்; 10 இடங்களில் 100  சதமடிப்பு

கோடை காலம் முடிவடைந்தாலும் வெயில் வாட்டி எடுப்பது மட்டும் குறையவே இல்லை. கடந்த சில நாட்களாக வெப்பத்தின் அளவு அதிகமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் தாண்டி வெப்பம் பதிவானது.

தமிழகத்தில் அக்னிநட்சத்திர காலத்தில் சென்னையில் வெயில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் அதன் பின்பு நேற்று மீண்டும் வெயில் அதிகரித்து கொண்டேதான் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த மே 28-ம் தேதியுடன் கத்திரி வெயில் முடிவடைந்த நிலையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து கொன்டே இருக்கிறது. இருந்தாலும் சில மாவட்டங்களில் மழை பொழிந்துள்ளது.

increase,heat,100 degrees,madurai,trichy ,அதிகரிப்பு, வெப்பம், 100 டிகிரி, மதுரை, திருச்சி

இதனால் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் அந்தமாநிலத்தில் பக்கத்திலுள்ள பகுதியில் வெயில் குறைந்தது மழைப்பொழிவு தொடங்கியுள்ளது.

ஆனால் தமிழகத்தில் நேற்று 10 இடங்களில் வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது. அதன்படி திருத்தணி, வேலூர், சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், மதுரை, திருச்சி, புதுவை, வேலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது.

Tags :
|