Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நிபந்தனைகளை பின்பற்றி வழக்கறிஞர்கள் அறையை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

நிபந்தனைகளை பின்பற்றி வழக்கறிஞர்கள் அறையை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

By: Nagaraj Sat, 23 May 2020 1:41:36 PM

நிபந்தனைகளை பின்பற்றி வழக்கறிஞர்கள் அறையை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

கொரோனா அச்சுறுத்தலால் மூடப்பட்டுள்ள வழக்கறிஞர்கள் அறையை மீண்டும் திறக்க, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நிபந்தனைகளை சரியான முறையில் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மார்ச் 25 லிருந்து, மிக அவசரமான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை மட்டும், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விசாரித்து வருகின்றனர்.


supreme court,permit,lawyers room,conditions ,உச்ச நீதிமன்றம், அனுமதி, வழக்கறிஞர்கள் அறை, நிபந்தனைகள்

உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர்கள், 'சேம்பர்' எனப்படும், வழக்கறிஞர் களுக்கான அறைகளும் இரண்டு மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இவற்றைத் திறப்பது தொடர்பான வழிகாட்டும் குறிப்புகளை வெளியிடும்படி, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், நீதிபதிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து, உச்ச நீதிதிமன்றம் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது; அதில் கூறப்பட்டுள்ளதாவது:

supreme court,permit,lawyers room,conditions ,உச்ச நீதிமன்றம், அனுமதி, வழக்கறிஞர்கள் அறை, நிபந்தனைகள்

வழக்கறிஞர்கள் அறை, வார நாட்களில் செயல்படலாம். ஆனால், ஒற்றைப்படை, இரட்டைப்படை எண்கள் அடிப்படையில், அறைகளை திறக்க வேண்டும். ஒற்றைப்படையில் முடிவடையும் எண்கள் உள்ள அறைகளை ஒரு நாள் திறந்தால், அடுத்த நாள், இரட்டைப் படை எண்ணில் முடிவடையும் அறைகளை திறக்க வேண்டும். அறைகளுக்குள் அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். அறைகளுக்கு வரும் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். சமூக விலகல் நடவடிக்கையை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

வார நாட்களில், காலை 10லிருந்து, மாலை, 4 மணி வரை அறைகளை திறக்கலாம். சனிக்கிழமையில், காலை, 10லிருந்து, பகல், 2 மணி வரை திறக்கலாம்.எல்லா அறைகளிலும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்த வேண்டும். வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களது பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். நுழைவாயிலில், உடல் வெப்பத்தை பரிசோதனை செய்த பின்பே, அனைவரும் உள்ளே அனுமதிக்கப்படுவர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|