Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனாவுக்கு எதிராக அமெரிக்காவில் வாழும் திபெத் சமுதாய மக்கள் போராட்டம்

சீனாவுக்கு எதிராக அமெரிக்காவில் வாழும் திபெத் சமுதாய மக்கள் போராட்டம்

By: Karunakaran Sun, 12 July 2020 09:20:29 AM

சீனாவுக்கு எதிராக அமெரிக்காவில் வாழும் திபெத் சமுதாய மக்கள் போராட்டம்

லடாக் எல்லையில் கடந்த மாதம் 15-ஆம் தேதி இந்திய எல்லை பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுருவியது. இதனால் இந்திய-சீன வீரர்களிடையே மோதல் நிலவியது. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த மோதலுக்கு பின், நாட்டுக்கு எதிராகவும், அவர்களது தயாரிப்புகளை புறக்கணிக்கக் கோரியும் இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடந்தன. மேலும், அமெரிக்காவில் வாழும் இந்தியர்களும் சீனாவின் ஆக்கிரமிப்பு போக்கை கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

tibetan,united states,china,strike ,திபெத்தியன், அமெரிக்கா, சீனா, எதிர்ப்பு

அமெரிக்காவில் உள்ள நியூயார்க், நியூஜெர்சி மாநிலங்களில் வசிக்கும் இந்தியர்கள், புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் கூடி சீனாவுக்கு எதிராக எதிர்ப்பை தெரிவித்து ஆர்பாட்டம் நடத்தினர். தற்போது, அமெரிக்காவின் நியூயார்க்கில் சீனாவின் அலட்சியமானபோக்கைக் கண்டித்து அங்கு வாழும் திபெத் சமுதாய மக்கள் போராட்டம் நடத்தினர்.

பதாகைகளை ஏந்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்து இந்த போராட்டம் நடத்தினர். இந்தியாவுக்கு ஆதரவளித்தும் போராட்டம் நடத்தினர். மேலும், திபெத்தில் இருந்து சீனா வெளியேற வேண்டும் என்று எழுதப்பட்டிருந்த வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர்.

Tags :
|