Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நவம்பர் 25ம் தேதிக்கு முன்னர் தடுப்பூசி அவசர கால அங்கீகாரத்தை பெறும் எண்ணமில்லை

நவம்பர் 25ம் தேதிக்கு முன்னர் தடுப்பூசி அவசர கால அங்கீகாரத்தை பெறும் எண்ணமில்லை

By: Nagaraj Thu, 01 Oct 2020 6:51:27 PM

நவம்பர் 25ம் தேதிக்கு முன்னர் தடுப்பூசி அவசர கால அங்கீகாரத்தை பெறும் எண்ணமில்லை

பயன்பாட்டுக்கு வராது... நவம்பர் 25ம் தேதிக்கு முன்னர், தனது தடுப்பூசிக்கான அவசர கால அங்கீகாரத்தை பெறும் எண்ணமில்லை என மாடர்னா நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதனால் அதிபர் தேர்தல் நடக்கும் நவம்பர் 3ம் தேதிக்கு முன்னர் இந்த தடுப்பூசியை பயன்பாட்டுக்கு விட நினைக்கும் அதிபர் டிரம்பின் திட்டத்திற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

vaccine specialists,moderna institute,trump administration,vaccine ,தடுப்பூசி நிபுணர்கள், மாடர்னா நிறுவனம், டிரம்ப் நிர்வாகம், தடுப்பூசி

அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தினமான நவம்பர் 3ம் தேதிக்கு முன்னர் இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துவிட்டால் அது தமக்கு தேர்தலில் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என டிரம்ப் கருதுகிறார். ஆனால், நவம்பர் 25ம் தேதியை ஒட்டியே தடுப்பூசியின் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட விவரங்கள் தயாராகும் என்பதால் அதற்குப் பிறகே மருந்து கட்டுப்பாட்டாளரின் அனுமதிக்கு விண்ணப்பிக்கப்படும் என மாடர்னா சிஇஓ ஸ்டீபன் பேன்சல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அரசியல் லாபத்திற்காக டிரம்ப் நிர்வாகம், மாடர்னா தடுப்பூசி அங்கீகார நடைமுறைகளில் தலையிடலாம் என்ற அச்சமும் தடுப்பூசி நிபுணர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Tags :