Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வவுனியா வைத்தியசாலையில் கொரோனா சமூகப் பரவலாக மாறுவதற்கான வாய்ப்புகள் இல்லை

வவுனியா வைத்தியசாலையில் கொரோனா சமூகப் பரவலாக மாறுவதற்கான வாய்ப்புகள் இல்லை

By: Nagaraj Mon, 19 Oct 2020 9:18:47 PM

வவுனியா வைத்தியசாலையில் கொரோனா சமூகப் பரவலாக மாறுவதற்கான வாய்ப்புகள் இல்லை

வாய்ப்புகள் இல்லை... வவுனியா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலாக மாறுவதற்கான வாய்ப்புகள் இல்லை என வைத்தியசாலை பணிப்பாளர் க.நந்தகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்று ஊடகங்களக்கு கருத்து வெளியிட்ட அவர், பூந்தோட்டம் தனிமைப்படுத்தல் மையத்தில் கொரோனோ தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் உரிய பாதுகாப்பு நடைமுறைகள் பேணப்பட்டே வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்டிருந்தனர் என தெரிவித்துள்ளார். எனவே அதன் மூலம் சமூகபரவல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

hospital,director,alert,public ,வைத்தியசாலை, பணிப்பாளர், எச்சரிக்கை, பொதுமக்கள்

தொற்றுநீக்கல் செயற்பாட்டிற்காகவே வைத்தியசாலை பிரதான வாயில் மூடப்பட்டுள்ளது என்றும் ஏனைய சிகிச்சை செயற்பாடுகள் வழமைபோல நடைபெற்றுவருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஊழியர்கள் பயணிக்கும் ஏனைய வாயில் வழியாக நோயாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் பொதுமக்கள் முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது எனவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் க.நந்தகுமார் தெரிவித்தார்.

Tags :
|