Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீர் மாதிரிகள் அறிக்கை சட்ட மா அதிபரிடம் இன்று கையளிப்பு

நீர் மாதிரிகள் அறிக்கை சட்ட மா அதிபரிடம் இன்று கையளிப்பு

By: Nagaraj Tue, 15 Sept 2020 3:27:27 PM

நீர் மாதிரிகள் அறிக்கை சட்ட மா அதிபரிடம் இன்று கையளிப்பு

நீர் மாதிரிகள் தொடர்பான அறிக்கை... தீ விபத்துக்கு உள்ளான நியூ டயமன்ட் கப்பலை அண்மித்த கடற்பிராந்தியத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட நீர் மாதிரிகள் தொடர்பான அறிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்படவுள்ளது.

இதேநேரம், குறித்த கப்பலில் இருந்த அனைத்து வகையான எரிபொருட்களினதும் மாதிரிகள், நேற்று கரைக்கு கொண்டுவரப்பட்டதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி டர்னி பிரதீப் குமார தெரிவித்தார்.

இதனையடுத்து, குறித்த மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக இன்று அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கப்பலில் பரவிய தீயை அணைப்பதற்காக அரசாங்கத்தினால் செலவிடப்பட்ட தொகையை மீள அறவிடுவதற்காக இந்நாட்களில் இழப்பீடு தொடர்பான மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

fire,ship,report,attorney general,oil ,தீ விபத்து, கப்பல், அறிக்கை, சட்டமா அதிபர், எண்ணெய்

அது தொடர்பான அறிக்கை கப்பலின் உரிமைக்குரிய நிறுவனத்திடம் விரைவில் சமர்ப்பிக்கப்படுமென கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு கிழக்கே சங்கமன்கண்டி இறங்குதுறையில் 38 கடல் மைல்கள் தொலைவில் எம்.டி. நியூ டயமன் என்ற எண்ணெய் தாங்கிக் கப்பல் தீ விபத்துக்கு உள்ளாகியது. இதனையடுத்து தீயை அணைக்க முன்னெடுக்கப்பட்ட பல கட்ட முயற்சிகளுக்கு பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|