Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் இளைய சகோதரர் இன்று மரணம்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் இளைய சகோதரர் இன்று மரணம்

By: Karunakaran Sun, 16 Aug 2020 1:53:49 PM

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் இளைய சகோதரர் இன்று மரணம்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிற்கு ஃப்ரெட் டிரம்ப், ராபர்ட் டிரம்ப் என 2 சகோதரர்கள் உள்ளனர். மேலும், மரியானா டிரம்ப் பெர்ரி, எலிசபெத் டிரம்ப் க்ரவ் என 2 சகோதரிகளும் உள்ளனர். இதில் டொனால்டு டிரம்பின் இளைய சகோதரரான ராபர்ட் டிரம்ப்க்கு 72 வயதாகிறது. ராபர்ட் டிரம்ப் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

டிரம்ப்பின் தொழில் நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளை ராபர்ட் டிரம்ப் கவனித்து வந்தார். இந்நிலையில் உடலநலக்குறைவு காரணமாக ராபர்ட் டிரம்ப் அவதியுற்று வந்தார். இதனால் அவர் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அமெரிக்க அதிபர் டிரம்ப் அவ்வப்போது ராபர்ட் டிரம்ப்பை சந்தித்து வந்தார்.

younger brother,us president,donald trump,died ,இளைய சகோதரர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இறப்பு

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராபர்ட் டிரம்ப் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது இளைய சகோதரர் ராபர்ட் மறைவுக்கு அதிபர் டிரம்ப் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டார். இது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனது சகோதரர் ராபர்ட் மறைவு குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ராபர்ட் எனது சகோதரன் மட்டுமல்ல, எனது நல்ல நண்பன். அவரை பெரிதும் தவறவிடுகிறேன். ஆனால் நாங்கள் மீண்டும் சந்திப்போம் என்று கூறினார்.


Tags :