Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வரும் 1ம் தேதி முதல் மேற்குவங்கத்தில் திரையரங்குகள் திறப்பு

வரும் 1ம் தேதி முதல் மேற்குவங்கத்தில் திரையரங்குகள் திறப்பு

By: Nagaraj Sun, 27 Sept 2020 5:57:18 PM

வரும் 1ம் தேதி முதல் மேற்குவங்கத்தில் திரையரங்குகள் திறப்பு

வரும் 1ம் தேதி முதல் மேற்குவங்கத்தில் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளன என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கொரோனா காரணமாக பிறக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, மால்கள் போன்றவை திறக்கப்பட்ட போதிலும், தியேட்டர்களை திறக்க இதுவரை மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை.

இந்த நிலையில், நாட்டிலேயே முதல் முறையாக திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஒன்றாம் தேதி முதல் ( வியாழக்கிழமை) சினிமா தியேட்டர்கள் திறக்கப்படுகின்றன. இதனை முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

west bengal,theaters,opening,permission ,மேற்கு வங்கம், திரையரங்குகள், திறப்பு, அனுமதி

தியேட்டர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என டிவிட்டரில் குறிபிட்டுட்டுள்ள மம்தா, 'மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்ற, விதிகளை மீறக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

நாடகம், இசை விழாக்கள், மேஜிக் ஷோக்கள் நடத்தவும் வரும் 1ம் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 6 மாதங்களாக மூடிக்கிடந்த சினிமா தியேட்டர்கள், முதன் முறையாக மேற்கு வங்கத்தில் மீண்டும் திறக்கப்படுகிறது. மே. வங்க மாநிலத்தில் ஒற்றை திரை கொண்ட 200 தியேட்டர்களும், 60 மல்டிபிளக்ஸ் திரையரங்குகளும் உள்ளன.

Tags :