Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தரிசன டிக்கெட் முன் பதிவு இணயதள முகவரியை மாற்றியது திருப்பதி தேவஸ்தானம்

தரிசன டிக்கெட் முன் பதிவு இணயதள முகவரியை மாற்றியது திருப்பதி தேவஸ்தானம்

By: Karunakaran Sat, 23 May 2020 5:01:25 PM

தரிசன டிக்கெட் முன் பதிவு இணயதள முகவரியை மாற்றியது திருப்பதி தேவஸ்தானம்

திருப்பதி டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கான இணையதள முகவரி மாற்றப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 15 தேதிக்கு பிறகு அனைத்து தரிசனங்களும் கொரோனா முன்னெச்சரிக்கைக்காக நிறுத்தப்பட்டன. ஏழுமலையானை தரிசனம் செய்து 64 நாட்கள் ஆன நிலையில் பெரும்பாலான பக்தர்கள் இ உண்டியல் காணிக்கைகள் மூலம் செலுத்தி வருகிறார்கள்.

மாநிலத்தில் உள்ள 13 தேவஸ்தான மாவட்ட மையங்களில் லட்டு விற்பனை வரும் 25 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. லாக்டவுன் காரணமாக லட்டு விலையை ரூ 50-இல் இருந்து ரூ 25-க்கு தேவஸ்தானம் குறைத்துள்ளது. ஏழுமலையான தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படும் வரை இந்த விலை குறைப்பு அமலில் இருக்கும் என தேவஸ்தான் தெரிவித்துள்ளது. அது போல் பெரிய லட்டுவின் விலையும் ரூ 200-இல் இருந்து ரூ 100-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

tirupathi,e ticket,booking,website address,covid-19 ,திருப்பதி , டிக்கெட் முன்பதிவு,இணையதள முகவரி ,லட்டு

ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்ய தேவஸ்தானம் https://ttdsevaonline.com என்ற இணையதளத்தை உருவாக்கியது. இந்த இணையதளத்தை பக்தர்கள் ஏழுமலையானை விரைவு தரிசனம் செய்யவும் வாடகை அறை முன் பதிவு செய்யும் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த இணையதள முகவரியை தேவஸ்தானம் மாற்றியுள்ளது. அதன்படி பக்தர்கள் இனி https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இன்று முதல் இந்த இணையதளம் செயல்பட தொடங்கும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பழைய முகவரியை கொடுத்தாலும் புதிய முகவரிக்கு வாடிக்கையாளரை அழைத்து செல்லும் வகையில் ரி-டேரைக்ட் செய்யப்பட்டுள்ளது.

Tags :