Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விவசாயத்திற்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் வழங்கும் நேரம் மாற்றி அமைப்பு

விவசாயத்திற்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் வழங்கும் நேரம் மாற்றி அமைப்பு

By: Monisha Wed, 04 Nov 2020 1:06:31 PM

விவசாயத்திற்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் வழங்கும் நேரம் மாற்றி அமைப்பு

தமிழகத்தில் விவசாயத்திற்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் வழங்கும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

தமிழகத்தில் விவசாயத்திற்கு மின்சார வாரியம் மும்முனை இலவச மின்சாரத்தை வழங்கி வருகிறது. தமிழகம் முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் இதன் மூலம் பயன் அடைந்து வருகின்றனர்.

விவசாயத்திற்கு தினசரி 6 மணி நேரம் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. டெல்டா மாவட்டங்களில் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், பிற மாவட்டங்களில் மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

agriculture,free electricity,electricity board,delta districts,time change ,விவசாயம்,இலவச மின்சாரம்,மின்வாரியம்,டெல்டா மாவட்டங்கள்,நேர மாற்றம்

இந்தநிலையில் இலவச மின்சாரம் வழங்கும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி டெல்டா மாவட்டங்களில் காலை 8½ மணி முதல் மதியம் 2½ மணி வரையில் இலவச மின்சாரம் வழங்கப்படும்.

பிற மாவட்டங்கள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பிரிவில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும், 2-வது பிரிவில் காலை 9½ மணி முதல் பிற்பகல் 3½ மணி வரையிலும் இலவச மின்சாரம் வினியோகம் செய்யப்படும். புதிய நேர மாற்றம் உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Tags :