Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிறேன் - அதிபர் டிரம்ப்

இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிறேன் - அதிபர் டிரம்ப்

By: Karunakaran Tue, 06 Oct 2020 08:40:59 AM

இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிறேன் - அதிபர் டிரம்ப்

அமெரிக்கா அதிபர் டிரம்ப்பின் உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்புக்கும், அவரது மனைவி மெலனியா டிரம்ப்புக்கும் கடந்த 2-ம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினியா ஆகிய இருவருக்குமே கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால் இருவரும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டிருந்த நிலையில் வெள்ளைமாளிகையில் இருந்த டொனால்டு டிரம்பிற்கு லேசான அறிகுறியுடன் காய்ச்சல் ஏற்பட்டது. காய்ச்சல் தொடர்ந்து நீடித்து வந்ததால், கடந்த 3-ம் தேதி மேல் சிகிச்சைக்காக அலபாமா மாகாணத்தில் உள்ள வால்டர் ரேட் தேசிய ராணுவ மருத்துமனையில் அதிபர் டொனால்டு டிரம்ப் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்படும்போது டிரம்ப்பின் நிலைமை சற்று மோசமாக இருந்ததாக தகவல் வெளியானது.

discharged,hospital,president trump,corona virus ,டிஸ்சார்ஜ், மருத்துவமனை, ஜனாதிபதி டிரம்ப், கொரோனா வைரஸ்

இந்நிலையில், வால்டர் ரேட் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த டிரம்ப் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நேற்று திடீரென காரில் சென்று மருத்துவமனைக்கு வெளியே நின்று கொண்டிருந்த தனது ஆதரவாளர்களை பார்வையிட்டார். தற்போது, தான் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் ஆவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனாவை கண்டு பயப்பட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், நான் வால்டர் ரேட் ராணுவ மருத்துவமனையில் இருந்து இன்று மாலை 6.30 மணிக்கு டிஸ்சார்ஜ் ஆகிறேன். நான் தற்போது நன்றாக உணருகிறேன். கொரோனாவை கண்டு பயப்பட வேண்டாம். இந்த வைரஸ் உங்கள் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்த விடாதீர்கள்... டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் நாங்கள் இந்த வைரசுக்கு சிறப்பான தடுப்பூசிகளையும், தகவல்களையும் உருவாக்கியுள்ளோம். நான் 20 ஆண்டுகளுக்கு முன்னாள் இருந்ததை விட நன்றாக உணருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.




Tags :