Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சர்வதேச சந்தையில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்களின் டாப் 5 மாடல்கள்

சர்வதேச சந்தையில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்களின் டாப் 5 மாடல்கள்

By: Karunakaran Sun, 21 June 2020 1:04:43 PM

சர்வதேச சந்தையில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்களின் டாப் 5 மாடல்கள்

2019 ஆண்டு ஆரம்பித்ததிலிருந்து முதல் சாம்சங் நிறுவனம் அதிகளவு கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. கேலக்ஸி ஏ சீரிஸ் வெளியாகி வெற்றி அடைந்ததால், தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனம் சந்தையில் இழந்த தனது பங்குகளை மீட்டெடுத்தது. 2019 ஆண்டு உலகில் அதிகம் விற்பனையான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மாடலாக கேலக்ஸி ஏ10 உள்ளது
.
ஒமிடா எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2019 ஆண்டு உலகில் அதிகம் விற்பனையான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மாடலாக கேலக்ஸி ஏ10 இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் சாம்சங் முதலிடம் பிடித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 2019 ஆண்டு அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்களில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் XR மற்றும் ஐபோன் 11 முன்னணி இடங்களை பிடித்துள்ளன.

smartphones,international market,best selling,top models ,ஸ்மார்ட்போன்,சர்வதேச சந்தை,அதிக விற்பனை,டாப் மாடல்

2019 ஆண்டு சர்வதேச அளவில் விற்பனையான சுமார் 137 கோடி ஸ்மார்ட்போன்களில், 4.63 கோடி யூனிட்கள் ஆப்பிள் ஐபோன் XR ஆகும். இது சந்தையில் விற்பனையான ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன்களில் 3 சதவீதம் ஆகும். ஐபோன் 11 ஸ்மார்ட்போன் 3.73 கோடி யூனிட்கள் விற்பனையாகி, 2.1 சதவீத பங்குகளை பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு நிலவரப்படி உலகில் அதிகம் விற்பனையான ஐந்து ஸ்மார்ட்போன்களில் இரு மாடல்கள் ஆப்பிள் நிறுவனம் உற்பத்தி செய்துள்ளது. மேலும் 2019 ஆண்டு விற்பனையான ஸ்மார்ட்போன்கள் கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்கள் ஆகும். கடந்த ஆண்டு கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போனை சுமார் 3.03 கோடி பேர் வாங்கியுள்ளனர். இது சந்தையில் 1.8 சதவீதம் பங்குகளை பெற்றுள்ளது. கேலக்ஸி ஏ50 மற்றும் கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆண்டு அதிகம் விற்பனையாகி முதல் 5 இடங்களை பெற்றுள்ளது.


Tags :