Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீசன் காலம் இல்லாவிட்டாலும் குற்றாலம் அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்

சீசன் காலம் இல்லாவிட்டாலும் குற்றாலம் அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்

By: Monisha Wed, 16 Dec 2020 5:48:15 PM

சீசன் காலம் இல்லாவிட்டாலும் குற்றாலம் அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்

சுற்றுலா தலங்களுக்கு அனுமதி வழங்கியதையடுத்து குற்றாலத்தில் காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை சுற்றுலா பயணிகள் குளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர். நேற்று காலை 6.00 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் குற்றாலம் அருவிகளில் குவிந்தனர். சபரிமலை சீசன் என்பதால் அய்யப்ப பக்தர்களும் ஏராளமானவர்கள் வந்தனர். இதனால் அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

சுற்றுலா பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் தரையில் தனித்தனியாக வட்டங்கள் போடப்பட்டு இருந்தன. இதையடுத்து சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்கள் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஒரே சமயத்தில் 10 பேர் வரை அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஒன்பது மாதங்களுக்கு பிறகு அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால், அங்குள்ள வியாபாரிகள், விடுதி உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

courtallam,tourism,waterfall,travelers,merchants ,குற்றாலம்,சுற்றுலா,அருவி,பயணிகள்,வியாபாரிகள்

தற்போது சீசன் காலம் இல்லாவிட்டாலும் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சுமாராக விழுந்தது. அதில் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர். நேற்று ஒரே நாளில் குற்றாலம் மெயினருவியில் 2,185 பேர், ஐந்தருவியில் 1,068 பேர், பழையகுற்றாலம் பகுதியில் 709 பேர், புலியருவியில் 680 பேர் என மொத்தம் 4,723 பேர் குளித்தனர். அவர்களுக்கு 10 நிமிடம் மட்டுமே குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கிடையே மாவட்ட கலெக்டர் சமீரன் அருவியை பார்வையிட கொரோனாவின் தாக்கத்தை பொறுத்து சுற்றுலா பயணிகள் குளிப்பதற்காக நேரம் நீட்டிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Tags :