Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தீபாவளி பண்டிகை விடுமுறையையொட்டி கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்

தீபாவளி பண்டிகை விடுமுறையையொட்டி கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்

By: Monisha Mon, 16 Nov 2020 10:46:53 AM

தீபாவளி பண்டிகை விடுமுறையையொட்டி கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்

ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தீபாவளி பண்டிகை விடுமுறையையொட்டி தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள், கடந்த 13-ந்தேதி மாலை முதலே வாகனங்களில் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர். அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினமும், நேற்றும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகை புரிந்ததால் நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ் வாக், பைன் மரக்காடு, ஏரிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் எங்கும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது. ஆனால் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்கள் திறக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் அவர்கள் நகரை ஒட்டியுள்ள மன்னவனூர், கூக்கால், பேத்துப்பாறை உள்ளிட்ட மலைக்கிராம பகுதிகளில் உள்ள சுற்றுலா இடங்களை பார்த்து ரசித்தனர்.

diwali,holidays,kodaikanal,tourists,parks ,தீபாவளி,விடுமுறை,கொடைக்கானல்,சுற்றுலா பயணிகள்,பூங்கா

சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை இருந்ததன் காரணமாக நகரில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. மேலும் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையே கொடைக்கானலில் நேற்று அதிகாலை நேரத்திலும், பகல் நேரங்களிலும் சாரல் மழை பெய்தது. மேகமூட்டமும் நகரை சூழ்ந்தபடி இருந்தது. இதனால் சூரியனின் முகத்தை பார்க்க முடியவில்லை. இதுமட்டுமின்றி பகல் நேரத்தில் கடும் குளிர் காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிருக்கு பாதுகாப்பான உடைகளை அணிந்தபடி நடமாடினர்.

Tags :
|