Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகன் சிகிச்சை உயிரிழப்பு

திருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகன் சிகிச்சை உயிரிழப்பு

By: Karunakaran Tue, 27 Oct 2020 1:29:18 PM

திருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகன் சிகிச்சை உயிரிழப்பு

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த வருடம் அதிகாலையில் 2 கொள்ளையர்கள் உள்ளே புகுந்து ரூ.12 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன் தலைமையிலான கும்பல் நடத்தியது என்ற தகவல் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

திருவாரூரை சேர்ந்த முருகன், தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களிலும் கைவரிசை காட்டி உள்ளார். முருகன் மீது ஏராளமான கொள்ளை வழக்குகள் உள்ளன. கடந்த 2008-ம் ஆண்டு முருகன் தனக்கென கொள்ளை கும்பலை உருவாக்கி கொண்டு, முதன்முதலில் பெங்களூருவில் கைவரிசை காட்ட தொடங்கினார்.

trichy,jewel robbery,murugan,death ,திருச்சி, நகை கொள்ளை, முருகன், மரணம்

மெலிந்த உடல் தேகத்துடன் பார்ப்பதற்கு பரிதாபத்துக்குரிய ஆளை போல் காட்சி அளிக்கும் முருகன், போலீசாருக்கே சவால் விடும் வகையில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றுவதில் கைத்தேர்ந்தவராக இருந்துள்ளார். இருப்பினும், கொடூர நோயால் பாதிக்கப்பட்ட முருகன் அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வந்துள்ளார்.

திருச்சி நகை கொள்ளை வழக்கில் தொடர்புடைய திருவாரூர் முருகன் பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்டநிலையில், சில மாதங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதனால் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். 6 மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொள்ளையன் முருகன் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Tags :
|