Advertisement

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்

By: Monisha Thu, 24 Dec 2020 11:02:20 AM

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்

வேகக்கட்டுப்பாட்டு கருவி வாங்குவதில் உள்ள சில பிரச்சினைகள், பிரதிபலிக்கும் ஸ்டிக்கர் ஒட்டுவது மற்றும் டீசல் வரியை குறைக்க வேண்டும், கொரோனா காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட சாலை வரியை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் வருகிற 27-ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்தனர்.

இதையடுத்து வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்த லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மற்றும் சங்கங்களுடன் போக்குவரத்து துறை ஆணையர் தென்காசி ஜவஹர் சென்னை கே.கே. நகரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

lorry,demand,strike,negotiation,withdrawal ,லாரி,கோரிக்கை,வேலைநிறுத்தம்,பேச்சுவார்த்தை,வாபஸ்

பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர், தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர், துணைத்தலைவர், மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் உள்பட பலர் சென்றிருந்தனர். நேற்று காலை 11.00 மணிக்கு தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை பிற்பகல் 3.00 மணி வரை நடந்தது.

சுமார் நான்கு மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில், சில கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், நிதி சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் குறித்து அரசிடம் பரிசீலித்து தெரிவிப்பதாகவும் போக்குவரத்து துறை ஆணையர் உறுதி அளித்ததாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதையடுத்து வருகிற 27-ம் தேதி முதல் நடைபெறுவதாக இருந்த வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவிட்டு வெளியே வந்த அனைத்து லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் மாநில தலைவர் குமாரசாமி தெரிவிதார்.

Tags :
|
|
|