Advertisement

டிரம்ப் - ஜோபிடன் நேரடி விவாதம் இன்று நடக்கிறது

By: Nagaraj Tue, 29 Sept 2020 5:46:11 PM

டிரம்ப் - ஜோபிடன் நேரடி விவாதம் இன்று நடக்கிறது

முதல் நேரடி விவாதம்... உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு முதல் நேரடி விவாதம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது.

இந்த விவாதத்தில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும், ஜனநாயக்கட்சி சர்பில் ஜோ பிடனும் பங்கேற்கின்றனர். இரு வேட்பாளர்களிடையே அவர்களது சாதனைகள், திட்டங்கள் குறித்து நேரடியாக விவாதம் நடைபெறும். இது நேரலையாக பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த விவாதம் 90 நிமிடங்கள் ஒஹியோ- கிளீவ்லேண்ட்வில் நடைபெறுகிறது.

முதல் விவாதத்தின்போது, அமெரிக்க உச்சநீதிமன்றக்கு புதிய பெண் நீதிபதியை ட்ரம்ப் பரிந்துரை செய்திருப்பது, பொருளாதாரம், பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் வன்முறை உள்ளிட்டவை குறித்து காரசாரமான விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

president,election debate,trump,jobitan,today ,ஜனாதிபதி, தேர்தல் விவாதம், டிரம்ப், ஜோபிடன், இன்று

இதற்கிடையே, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 70 பேர், விவாதத்தில் பருவநிலை மாற்றத்தையும் விவாதப் பொருளாகச் சேர்க்க வேண்டும் என ஜனாதிபதி தேர்தல் விவாத ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக இரு கட்சி சார்பிலும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவோர் ஒரே மேடையில் நேருக்கு நேர் பங்கேற்கும் மூன்று விவாத நிகழ்ச்சிகளும், துணை ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுவோர் பங்கேற்கும் ஒரு விவாத நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிகழ்ச்சியை ஜனாதிபதி தேர்தல் விவாத ஆணையம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags :
|