Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இருநூறு பேருக்கு கொரோனா பாதிப்பு: பசுமைக்குடில் பண்ணை மூடப்பட்டது

இருநூறு பேருக்கு கொரோனா பாதிப்பு: பசுமைக்குடில் பண்ணை மூடப்பட்டது

By: Nagaraj Fri, 03 July 2020 7:59:04 PM

இருநூறு பேருக்கு கொரோனா பாதிப்பு: பசுமைக்குடில் பண்ணை மூடப்பட்டது

பசுமைக்குடில் பண்ணை மூடப்பட்டது... நூற்றுக்கணக்கில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதிப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கனடாவில் ஒரு பெரிய பசுமைக்குடில் பண்ணை, மூடப்பட்டுள்ளது.

வார இறுதியில் மூடப்பட்ட குறித்த பண்ணையில் கிட்டத்தட்ட 200பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது. லீமிங்டனில் உள்ள நேச்சர் ஃப்ரெஷ் நிறுவனம், சுமார் 360 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட 670 தொழிலாளர்களைக் கொண்டுள்ளது.

greenpeace,canada,200 people,corona,closure ,பசுமைப்பண்ணை, கனடா, 200 பேர், கொரோனா, மூடல்

விண்ட்சர் எசெக்ஸ் கவுண்டி சுகாதார பிரிவினால் குறித்த பண்ணை மூடப்பட்டுள்ளதாக விண்ட்சர் ஸ்டார் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள பண்ணைகளில், குறிப்பாக வெளிநாட்டு தொழிலாளர்கள் மத்தியில் அதிக வைரஸ் தொற்றுகள் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கனடாவில் கடந்த சில நாட்களாக குறைவாக இருந்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது அதிகரிக்கத் தொடங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கனடாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் 501 பேர் பாதிப்படைந்ததோடு, 27பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 19ஆவது நாடாக கனடாவில் மாறியுள்ளது.

Tags :
|
|