Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இரண்டு வணிகர்கள் உயிரிழப்புக்கு நீதி கேட்டு இன்று தமிழகம் முழுவதும் கடையடைப்பு

இரண்டு வணிகர்கள் உயிரிழப்புக்கு நீதி கேட்டு இன்று தமிழகம் முழுவதும் கடையடைப்பு

By: Monisha Wed, 24 June 2020 10:09:25 AM

இரண்டு வணிகர்கள் உயிரிழப்புக்கு நீதி கேட்டு இன்று தமிழகம் முழுவதும் கடையடைப்பு

ஊரடங்கு விதிகளை மீறியதாக கைது செய்யப்பட்ட சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்தனர். இந்நிலையில் போலீஸ் காவலில் அவர்கள் இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது.

இந்நிலையில், சாத்தான்குளம் போலீசார் காவல் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு அவர்கள் இருவரும் மரணம் அடைந்ததாக கூறி போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாத்தான்குளம், உடன்குடி பகுதிகளில் வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர்.

police,traders,death,investigation,merchants ,போலீசார்,வணிகர்கள்,உயிரிழப்பு,விசாரணை,வியாபாரிகள்

இதற்கிடையே தமிழ்நாடு வணிகா் சங்கப் பேரவைத் தலைவா் வெள்ளையன், இரண்டு வணிகர்கள் உயிரிழப்புக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடத்தப்படும் என தெரிவித்திருந்தார். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அதன்படி, இன்று மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தந்தை-மகன் மரணத்தில் குற்றம்சாட்டப்படும் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். சாத்தான்குளம் காவல்நிலைய காவலர்கள் அனைவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று தாமாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளது.

Tags :
|
|