Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஐ.நா. மாநாட்டில் காணொலிக்காட்சி வாயிலாக பங்கேற்று உரையாற்றிய மதுரை மாணவி நேத்ரா

ஐ.நா. மாநாட்டில் காணொலிக்காட்சி வாயிலாக பங்கேற்று உரையாற்றிய மதுரை மாணவி நேத்ரா

By: Nagaraj Sun, 26 July 2020 6:44:36 PM

ஐ.நா. மாநாட்டில் காணொலிக்காட்சி வாயிலாக பங்கேற்று உரையாற்றிய மதுரை மாணவி நேத்ரா

நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடைபெற்று வரும் பாலின சமத்துவம் குறித்த மாநாட்டில் காணொலிக் காட்சி மூலமாக பங்கேற்று மதுரை மாணவி நேத்ரா முதல்முறையாக உரை நிகழ்த்தினார்.

கடந்த மே மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் மதுரையை சேர்ந்த மோகன் என்ற முடிதிருத்தும் தொழிலாளியின் கொரோனா கால மனித நேய சேவை குறித்து புகழ்ந்து பேசினார். தனது மகள் நேத்ராவின் எதிர்காலத்திற்காக சேமித்து வைத்திருந்த பணத்தில் ஏழைகளுக்கு உதவியதை குறிப்பிட்டு பாராட்டினார்.

இதனை அடுத்து முடிதிருத்தும் தொழிலாளி மோகனின் மகள் நேத்ராவை ஐக்கிய நாடுகள் அவையால் அங்கீகரிக்கப்பட்ட யுஎன்ஏடிஏபி என்ற தன்னார்வ நிறுவனம், உலக ஏழைகளின் நல்லெண்ணத் தூதுவராக அறிவித்து சிறப்பு செய்திருந்தது. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் அவையின் சார்பாக ஏழைகள் பெண்கள் குழந்தைகள் குறித்து நடைபெறும் மாநாடுகளில் பங்கேற்பதற்கும் அழைப்பு விடுத்திருந்தது.

un text,madurai nethra,women,video ,
ஐநா உரை, மதுரை நேத்ரா, பெண்கள், காணொலி காட்சி

தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலக அளவில் நடைபெறும் பல்வேறு கருத்தரங்குகள் காணொலிக் காட்சி மூலமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நியூயார்க்கில் அமைந்துள்ள ஐநா தலைமையகத்தில் ‘பாலின சமத்துவத்தை உணர செய்தல் மற்றும் அனைத்து பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் அதிகாரம் பெறுதல்’ என்ற தலைப்பில் கடந்த ஜூலை 21ம் தேதி நடைபெற்றது.

அதில் பங்கேற்று காணொலி காட்சி மூலம் மதுரையில் இருந்து பேசிய மாணவி நேத்ரா, இந்திய அரசு பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் நலன் சார்ந்து கொண்டுவரும் பெண் குழந்தைகள் கல்வி (Beti Bachao Beti Padhao)(BBBP) உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும், தமிழக அரசின் சார்பாக பணிக்குச் செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கப்படுவது ஆகியவை குறித்தும் பேசினார்.

பெண்களுக்கான மகப்பேறு விடுமுறையை மத்திய அரசு 12 வாரத்திலிருந்து 26 வாரங்களாக அதிகரித்தது குறித்தும் அந்த உரையில் பகிர்ந்து கொண்டார்.

Tags :
|