Advertisement

கொரோனா பரிசோதனைக்கு பயந்து தலைமறைவான வர்த்தகர்கள்

By: Nagaraj Tue, 29 Dec 2020 8:22:17 PM

கொரோனா பரிசோதனைக்கு பயந்து தலைமறைவான வர்த்தகர்கள்

வர்த்தகர்கள் தலைமறைவு... கல்முனை மாநகர பொதுச்சந்தை பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொது சுகாதார அதிகாரிகள் இணைந்து பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோனைகள் மேற்கொள்ளும்போது, அங்கிருந்த சில வர்த்தகர்கள் கடைகளை அவசரமாக மூடிவிட்டு தலைமறைவாகியுள்ளனர்.

நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோனையின்போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதேவேளை அங்கு 200 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 27 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கல்முனை தெற்கு சுகாதாரப் பிரிவில் கொரோனா தொற்று தீவிரமடைந்த நிலையில் நேற்று, கல்முனை மாநகர பொதுச்சந்தையை காலையில் இராணுவத்தினர் திடீரென சுற்றிவளைத்து சந்தைப்பகுதிக்கு செல்லவோ வெளியேறவோ முடியாதவாறு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர் .

health officials,corona,examination,traders,occult ,சுகாதார அதிகாரிகள், கொரோனா, பரிசோதனை, வர்த்தகர்கள், தலைமறைவு

இந்நிலையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ சுகுணனின் நேரடி கண்காணிப்பில், பொதுசுகாதார அதிகாரிகள் அந்த பகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட மற்றும் பொருட்களை கொள்வனவு செய்ய சென்றவர்கள் உட்பட 200 பேருக்கு பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளை எழுமாறாக மேற்கொண்டனர். இதன்போது சந்தை வர்த்தக சங்கத்தினர் முழு ஒத்துழைப்பை வழங்கினர்.

ஆனாலும் சில கடை வர்த்தகர்கள், திடீரென கடைகளை மூடிவிட்டு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் குறித்த பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்களுடன் தொடர்பினை பேணியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
|