Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்

விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்

By: Nagaraj Thu, 03 Dec 2020 10:12:12 PM

விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்... வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், அரியானா விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் இன்று சந்தித்து பேசினார்.

விவசாயிகள் போராட்டத்தால் பஞ்சாப் மாநில பொருளாதாரமும், நாட்டின் பாதுகாப்பும் பாதிக்கப்படுவதால் இந்த பிரச்சினையைத் விரைவில் தீர்க்கும்படி உள்துறை மந்திரியிடம் வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.

மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், அரியானா விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் வருகின்றனர்.

amarinder singh,problem,struggle,farmers,protest ,அமரீந்தர் சிங், பிரச்னை, போராட்டம், விவசாயிகள், எதிர்ப்பு

அவர்களின் போராட்டம் இன்று 8வது நாளாக தொடர்ந்தது. மத்திய அரசு, விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும் எந்த முடிவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சந்தித்து பேசினார்.

விவசாயிகளின் போராட்ட நிலைமை குறித்து உள்துறை மந்திரியிடம் விளக்கிய அமரீந்தர் சிங் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த போராட்டத்தை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இந்த சந்திப்புக்கு பிறகு அமரீந்தர் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் நான் தீர்க்க எதுவும் இல்லை. வேளாண் சட்டங்களுக்கு உள்துறை மந்திரியிடம் எதிர்ப்பு தெரிவித்தேன். விவசாயிகளின் போராட்டம் பஞ்சாப் மாநிலத்தின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்து உள்ளது. மேலும், நாட்டின் பாதுகாப்பும் பாதிக்கும் அபாயம் உள்ளதால் இந்த பிரச்சினையைத் விரைவில் தீர்க்கும்படி அவரிடம் வலியுறுத்தினேன். இவ்வாறு அமரீந்தர் சிங் கூறினார்.

Tags :