Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ‘எச்1 பி’ விசா வழங்குவதை நிறுத்தி வைக்கும் டிரம்பின் உத்தரவுக்கு அமெரிக்க கோர்ட்டு தடை

‘எச்1 பி’ விசா வழங்குவதை நிறுத்தி வைக்கும் டிரம்பின் உத்தரவுக்கு அமெரிக்க கோர்ட்டு தடை

By: Karunakaran Sat, 03 Oct 2020 2:24:12 PM

‘எச்1 பி’ விசா வழங்குவதை நிறுத்தி வைக்கும் டிரம்பின் உத்தரவுக்கு அமெரிக்க கோர்ட்டு தடை

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அந்த நாடு ‘எச்1 பி’ விசா வழங்கி வருகிறது. வழக்கமாக 3 ஆண்டுகள் வரையே உள்ள இந்த ‘எச்1 பி’ விசாவை தேவைப்பட்டால் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து கொள்ள முடியும். இந்த விசாவை உலக நாடுகளில் அதிக அளவு இந்தியர்களும், சீனர்களும்தான் பெற்று வருகின்றனர்.

தற்போது கொரோனா காரணமாக லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வேலையை இழந்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் வேலைவாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வந்து வேலை செய்வதற்காக வழங்கப்படும் ‘எச்1 பி’, ‘எச்2 பி’, ‘எல்’ மற்றும் ‘ஜே’ விசாக்கள் வழங்குவதை இந்த ஆண்டு இறுதி வரை நிறுத்தி வைக்க கடந்த ஜூன் மாதம் ஜனாதிபதி டிரம்ப் உத்தரவு பிறப்பித்தார்.

us court,ban,trump,h1b visas ,அமெரிக்க நீதிமன்றம், தடை, டிரம்ப், எச் 1 பி விசாக்கள்

இதுகுறித்து அமெரிக்காவைச் சேர்ந்த பல ஐ.டி. நிறுவனங்கள் டிரம்ப் நிர்வாகத்தின் முடிவை எதிர்த்து கலிபோர்னியா மாகாணத்தின் வடக்கு மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஜெப்ரி வைட் ‘எச்1 பி’ விசா வழங்குவதை நிறுத்தி வைக்கும் டிரம்பின் உத்தரவுக்கு தடை விதித்து தீர்ப்பளித்தார்.

நீதிபதி தீர்ப்பில், குடியேற்றக் கொள்கையில் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தல் மற்றும் குடியேற்றமற்ற வெளிநாட்டினரின் வேலைவாய்ப்பு தொடர்பாக உள்நாட்டுக் கொள்கை அமைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை. அதாவது குடியேற்ற கொள்கையை அமைக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே உள்ளது. ஜனாதிபதிக்கு அல்ல என்பதை அரசியலமைப்பு தெளிவுபடுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

Tags :
|
|