Advertisement

அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி அதிரடியாக நீக்கம்

By: Nagaraj Tue, 10 Nov 2020 09:09:28 AM

அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி அதிரடியாக நீக்கம்

அதிரடியாக நீக்கம்... அமெரிக்க பாதுகாப்புத் துறை மந்திரியாக பதவி வகித்து வந்த மார்க் எஸ்பர், அப்பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க பாதுகாப்புத் துறை மந்திரியாக பதவி வகித்து வந்த மார்க் எஸ்பர், அப்பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அதிபர் டிரம்ப் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

அவருக்கு பதிலாக தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குனர் கிரிஸ்டோபர் மில்லர் அப்பதவிக்கு பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

cracks,usa,dismissal,minister,trump ,விரிசல், அமெரிக்கா, அதிரடி நீக்கம், அமைச்சர், டிரம்ப்

இதுதொடர்பாக, அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில் கூறுகையில், மார்க் எஸ்பர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குனர் கிறிஸ்டோபர் மில்லர் அந்த பதவிக்கு நியமிக்கப்படுகிறார். அவர் பாதுகாப்பு துறையின் பொறுப்பு அமைச்சராக உடனடியாக பதவி ஏற்கிறார்.

எஸ்பரின் பணிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். அமெரிக்காவில் நிகழாண்டு துவக்கத்தில் நடைபெற்ற போராட்டங்களை ஒடுக்க பாதுகாப்பு படையினரை ஈடுபடுத்த மறுப்பு தெரிவித்ததில் இருந்தே எஸ்பருக்கும் டிரம்புக்கும் இடையே விரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

Tags :
|
|