Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பேஸ்புக் மெசஞ்சர் ஆப்-ன் புதிய அறிவிப்பால்ட பயனாளர்கள் அதிருப்தி

பேஸ்புக் மெசஞ்சர் ஆப்-ன் புதிய அறிவிப்பால்ட பயனாளர்கள் அதிருப்தி

By: Nagaraj Tue, 08 Sept 2020 1:33:33 PM

பேஸ்புக் மெசஞ்சர் ஆப்-ன் புதிய அறிவிப்பால்ட பயனாளர்கள் அதிருப்தி

பேஸ்புக் மெசஞ்சர் ஆப் தற்போது அப்டேட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட ஆப்பில் ஒரு குறுந்தகவலை அதிகபட்சம் ஐந்து பேருக்கு மட்டுமே ஃபார்வேர்டு செய்ய முடியும். இது பயனாளர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.

கொரோனா குறித்த தகவல்கள் அதிக அளவில் போலியாக வெளிவந்த வண்ணம் இருந்த நிலையில் சமீபத்தில் பேஸ்புக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகத் தெரிவித்தது.

இந்த நிலையில் ஃபேஸ்புக் நிறுவனம் விரைவில் போலித் தகவல்களை நீக்குவது குறித்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது தரவுகளை ஆட்டோமேஷன் முறையில் ஆய்வு செய்து, பேஸ்புக் நிறுவனம் கொரோனா வைரஸ் பற்றி தவறான தகவல் கொண்ட சுமார் 70 லட்சம் பதிவுகளை நீக்கி உள்ளது.

facebook,messenger app,dissatisfied,users,sms ,பேஸ்புக், மெசஞ்சர் ஆப், அதிருப்தி, பயனாளர்கள், குறுந்தகவல்

மேலும் மற்றொருபுறம் போலித் தகவல்களை வெகு விரைவாக ஃபார்வேர்டு செய்து பலருக்கும் அனுப்பிவிடுவதால், பேஸ்புக் ஃபார்வேர்டு செய்வதில் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

அதாவது பேஸ்புக் மெசஞ்சர் ஆப் ஆனது தற்போது அப்டேட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது, இந்த மேம்படுத்தப்பட்ட ஆப்பில் ஒரு குறுந்தகவலை அதிகபட்சம் ஐந்து பேருக்கு மட்டுமே ஃபார்வேர்டு செய்ய முடியும்.

ஃபார்வேர்டு ஆப்ஷனைக் கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, போலியான தகவல்கள் பரவாமல் தடுக்க உடியும் என பேஸ்புக் மெசஞ்சரின் ஜே சலிவன் தெரிவித்து கூறி உள்ளார். பேஸ்புக் மெசஞ்சரில் வந்த இந்த அம்சம் பலருக்கும் அதிருப்தியினையே கொடுத்துள்ளது.

Tags :
|