Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திண்டுக்கல் மற்றும் மேலூர் பாசன நிலங்களுக்காக வைகை அணை நீர் திறப்பு

திண்டுக்கல் மற்றும் மேலூர் பாசன நிலங்களுக்காக வைகை அணை நீர் திறப்பு

By: Monisha Tue, 01 Dec 2020 12:09:34 PM

திண்டுக்கல் மற்றும் மேலூர் பாசன நிலங்களுக்காக வைகை அணை நீர் திறப்பு

தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையிலிருந்து திண்டுக்கல் மற்றும் மேலூர் பகுதியின் இரு போக பாசன நிலங்களுக்காக முறைப்பாசன அடிப்படையில் பெரியாறு பிரதான கால்வாய் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இப்பகுதிகளுக்கு முறைப்பாசன அடிப்படையில் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்நிலையில் வைகை அணையின் நீர்மட்டம் 62 அடி வரை உயர்ந்ததால் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்துக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

இதனால் நேற்று முதல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அரசு உத்தரவின் படி அணையில் இருந்து மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், மாவட்ட வைகை பூர்வீக பாசனத்துக்காகவும், மதுரை குடிநீர் தேவைக்காகவும் சேர்த்து 5059 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 71 அடி உயரமுள்ள வைகை அணையில் இன்று காலை நிலவரப்படி 60.37 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1513 கன அடி தண்ணீர் வருகிறது.

irrigation,dam,opening,canal,water ,பாசனம்,அணை,திறப்பு,கால்வாய்,தண்ணீர்

அணையின் நீர் இருப்பு 3673 மில்லியன் கனஅடியாக உள்ளது. தற்போது திறக்கப்படும் இந்த தண்ணீர் வருகிற 17-ந் தேதி வரை 3 கட்டங்களாக 1792 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக ராமநாதபுரம் மாவட்ட பாசன நிலங்களுக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் சிறிய மதகுகள் வழியாக வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் அணையின் இருபுறம் உள்ள கரைகளையும் இணைக்கும் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. தற்போது திறக்கப்பட்ட தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டு அடுத்து வரும் நாட்களில் சிவகங்கை மற்றும் மதுரை மாவட்ட பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கப்பட உள்ளது என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

Tags :
|
|