Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகம் முழுவதும் பயணிகள் ரயில்களை இயக்க வைகோ வலியுறுத்தல்

தமிழகம் முழுவதும் பயணிகள் ரயில்களை இயக்க வைகோ வலியுறுத்தல்

By: Monisha Sat, 19 Dec 2020 1:29:13 PM

தமிழகம் முழுவதும் பயணிகள் ரயில்களை இயக்க வைகோ வலியுறுத்தல்

ஏழை மக்கள் நலன் கருதி பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- கொரோனா ஊரடங்கிற்குப் பின்னர், ரயில்வே துறையினர், பாதிக்கும் குறைந்த அளவிலேயே ரயில்களை இயக்கி வருகின்றனர். அப்படி ஓடுகின்ற ரயில்கள், முன்பு வழக்கமாக நிற்கின்ற பெரிய ரயில் நிலையங்களில் கூட இப்போது நிற்காமல் ஓடுகின்றன. இதனால், தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகரம் மட்டும் அல்ல, நூற்றுக்கணக்கான தீப்பெட்டி ஆலைகள், கடலை மிட்டாய், பட்டாசு, விவசாயம், நூற்பு ஆலைத் தொழில்கள் நிறைந்த பகுதி கோவில்பட்டி ஆகும். இவை தவிர, மத்திய மாநில அரசு அலுவலகங்கள், தனியார், அரசு கலைக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளும் நிறைய உள்ளன. கோவில்பட்டி வழியாக நாள்தோறும் 27 பயணிகள் ரயில்கள் இரு வழிகளிலும் ஓடிக்கொண்டிருந்தன. முன்பதிவின் மூலமாக, நாள்தோறும் ரூபாய் 4 லட்சம் என ஆண்டுக்கு ரூபாய் பத்துக்கோடி மதுரை கோட்டத்திற்கு வருவாய் பெற்றுத் தருவதால், கோவில்பட்டி நிலையம், ‘ஏ’ கிரேடு தகுதி பெற்றிருக்கின்றது.

train,service,name,confusion,passengers ,ரயில்,சேவை,பெயர்,குழப்பம்,பயணிகள்

ஆனால், இப்போது பாதி ரயில்கள் தான் ஓடுகின்றன. மேலும் அவை கோவில்பட்டி நிலையத்தில் நிற்காமல் செல்கின்றன. வாரந்தோறும் புதன், வெள்ளி ஆகிய நாட்களில் மட்டுமே ஓடுகின்ற, கன்னியாகுமரி டெல்லி நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயில் வெள்ளிக்கிழமை மட்டும் ஓடுகின்ற நாகர்கோவில்-சென்னை ஆகிய ரயில்களும் கோவில்பட்டி நிலையத்தில் நிற்பது இல்லை. இதனால், ஏழை,எளிய, நடுத்தரப் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

தற்போது விரைவு ரயில்களை மட்டுமே இயக்கிக் கொண்டிருக்கின்றார்கள். பயணிகள் ரயில்களை இயக்குவது குறித்து, எந்த அறிவிப்பும் இல்லை. ஆனால், தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான அன்றாட பயணிகள் ரயில்களைத் தான் நம்பி இருக்கின்றனர். எனவே, பயணிகள் ரயில்களையும் இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

பொதிகை, நெல்லை, கன்னியாகுமரி என்ற பழந்தமிழ்ப் பெயர்களில் ஓடிக்கொண்டிருந்த ரயில்களின் பெயர்களையும் மறைத்து, சிறப்பு ரயில்கள் என ஒரே பெயரில் இயக்குகின்றார்கள். இது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் செயல். வழக்கமான பெயர்களிலேயே ரயில்களை இயக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|
|