Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காய்கறிகள் வரத்து அதிகரித்தும் காய்கறி விலை மிகவும் உயர்வு

காய்கறிகள் வரத்து அதிகரித்தும் காய்கறி விலை மிகவும் உயர்வு

By: Monisha Mon, 05 Oct 2020 6:49:59 PM

காய்கறிகள் வரத்து அதிகரித்தும் காய்கறி விலை மிகவும் உயர்வு

சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக கடந்த மே மாதம் 5-ந் தேதி கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. திருமழிசையில் தற்காலிக சந்தை திறக்கப்பட்டது. அந்த சந்தை நகரில் இருந்து தொலைவில் இருப்பதால் காய்கறிகள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு ஏற்பட்டது. இந்த நிலையில் 146 நாட்களுக்கு பிறகு கடந்த செப்டம்பர் 28-ந் தேதி கோயம்பேடு மார்க்கெட் திறக்கப்பட்டது.

ஆனால் மார்க்கெட்டுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. 197 மொத்த வியாபாரிகள் மட்டும் வியாபாரம் செய்கிறார்கள்.

தற்போது காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளது. 350-க்கும் மேற்பட்ட லாரிகளில் தினமும் காய்கறிகள் வந்து குவிகின்றன. இருப்பினும் விலையும் உயர்ந்துள்ளது. அனைத்து காய்கறிகளும் குறைந்தபட்சம் கிலோவுக்கு ரூ.5 முதல் 20 வரை அதிகரித்துள்ளது. இதனால் சில்லறை விற்பனை கடைகளில் காய்கறி விலை மிகவும் அதிகரித்துள்ளது.

chennai,vegetables,rise,koyembedu,market ,சென்னை,காய்கறிகள்,விலை உயர்வு,கோயம்பேடு,சந்தை

ரூ.15க்கு விற்கப்பட்ட முட்டை கோஸ் ரூ.20, ரூ.50க்கு விற்பனையான கேரட் ரூ.60, சின்ன வெங்காயம் ரூ.50-ல் இருந்து ரூ.70 ஆகவும், இதே போல் பச்சை மிளகாய், இஞ்சி, பாகற்காய், உருளைக்கிழங்கும் கிலோவுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வுக்கு காரணம் லாரி வாடகை உயர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. இப்போது திடீரென்று லாரி வாடகை ஏன் உயர்த்தப்பட்டது என்பது தெரியவில்லை. காய்கறிகள் தேவையான அளவு வந்து குவிந்தும் விலை குறையாதது வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
|