Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வரத்து அதிகரிப்பால் மதுரையில் காய்கறிகள் மலிவு விலையில் விற்பனை

வரத்து அதிகரிப்பால் மதுரையில் காய்கறிகள் மலிவு விலையில் விற்பனை

By: Monisha Sat, 30 May 2020 5:15:04 PM

வரத்து அதிகரிப்பால் மதுரையில் காய்கறிகள் மலிவு விலையில் விற்பனை

மதுரை மாட்டுத்தாவணியில் செயல்பட்டு வந்த சென்ட்ரல் மொத்த காய்கறி மார்க்கெட் மக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக மாட்டுத்தாவணி பஸ் நிலைய பின்பகுதிக்கு மாற்றப்பட்டது.

கடந்த சில நாட்களாக மதுரை மார்க்கெட்டுக்கு காய்கறிகளும், பழங்களும் அதிக அளவில் வருவதால் அதன் விலை குறைந்து வந்தது. சில நாட்களுக்கு முன்பு விற்பனை ஆன விலையில் பாதி விலைக்கு தற்போது காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.

மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் கேரட், உருளைக்கிழங்கு கிலோ ரூ. 20-க்கும், பெரிய வெங்காயம் ரூ. 15-க்கும், சின்ன வெங்காயம் ரூ. 30-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சவ்சவ், கோஸ், கத்தரிக்காய், தக்காளி ரூ.10-க்கும், பீட்ரூட் ரூ.12-க்கும், மிளகாய் ரூ. 18-க்கும் விற்கப்படுகிறது.

madurai,vegetable market,revenue increase,price decline ,மதுரை,காய்கறி மார்க்கெட்,வரத்து அதிகரிப்பு,விலை சரிவு

அவரை, முருங்கைக்காய் ரூ. 20-க்கு விற்னை ஆகிறது. கடந்த வாரம் விற்பனை விலையை ஒப்பிடும்போது பாதியாக விலை குறைந்துள்ளது. மேலும் பட்டர்பீன்ஸ், சோயாபீன்ஸ், கொத்தமல்லி ஆகியவற்றின் வரத்து குறைவாக உள்ளதால் கிலோ ரூ. 100-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சில்லரை காய்கறி மார்க்கெட்டுகளில் காய்கறிகளின் விலை கிலோவுக்கு ரூ. 20 வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், தற்போது காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளது. விழாக்கள் குடும்ப நிகழ்ச்சிகள் நடைபெறாததால் காய்கறிகள் அதிக வரத்து இருந்தும் விற்பனை குறைவாக உள்ளது. சில நாட்களாக காய்கறிகள் விலை இறங்கு முகமாக இருந்து வருகிறது. மழை தொடர்ந்தால் காய்கறி விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என கூறினார்.

Tags :