Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அப்போ இனி சாம்பாருக்கும் "ஆப்பா"... சென்னையில் காய்கறிகள் விலை கடும் உயர்வு

அப்போ இனி சாம்பாருக்கும் "ஆப்பா"... சென்னையில் காய்கறிகள் விலை கடும் உயர்வு

By: Nagaraj Thu, 07 May 2020 06:26:44 AM

அப்போ இனி சாம்பாருக்கும் "ஆப்பா"... சென்னையில் காய்கறிகள் விலை கடும் உயர்வு

சென்னை: கொரோனா பரவல் எதிரொலியாக கோயம்பேடு மார்க்கெட் தற்காலிகமாக மூடப்பட்டது. இதையடுத்து சென்னையில் காய்கறி விலை கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது.
கொரோனா வைரசின் தாக்கத்தால் சென்னையில் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் காய்கறி விற்பனை சந்தையான கோயம்பேடு மார்க்கெட் கொரோனோ விற்பனை சந்தையாக மாறியது தான்.

vegetables,prices,coimbatore,closure,echo. ,காய்கறிகள், விலை உயர்வு, கோயம்பேடு, மூடல், எதிரொலி.

கோயம்பேடு மார்க்கெட் தொடர்பான கொரோனா பாதிப்பில் சென்னையில் மட்டும் 150க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட் தற்காலிகமாக மூடப்பட்டதால் பூந்தமல்லியை அடுத்த திருமழிசையில் நாளை (மே 7) முதல் தற்காலிகமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

vegetables,prices,coimbatore,closure,echo. ,காய்கறிகள், விலை உயர்வு, கோயம்பேடு, மூடல், எதிரொலி.

இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டதால் சென்னையில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பாடு பெரும் திண்டாட்டம் ஆகி உள்ளது. கொரோனா பரவலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வேலை வாய்ப்பை இழந்துள்ள நடுத்தர குடும்பத்தினர் இதனால் பெரும் வேதனைக்குள்ளாகி உள்ளனர்.

Tags :
|