Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்வு... சின்னவெங்காயம் கிலோ ரூ.110-க்கு விற்பனை!

காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்வு... சின்னவெங்காயம் கிலோ ரூ.110-க்கு விற்பனை!

By: Monisha Wed, 21 Oct 2020 6:04:15 PM

காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்வு... சின்னவெங்காயம் கிலோ ரூ.110-க்கு விற்பனை!

புரட்டாசி மாதம் நிறைவுபெற்று, நவராத்திரி தொடங்கி உள்ளது. நவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் சைவ உணவையே சாப்பிடுவார்கள். இதனால் காய்கறிகளின் தேவை அதிகரித்து விட்டது. இதனால் திண்டுக்கல்லில் காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்து விட்டது. அதன்படி திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் நேற்று முருங்கைக்காய் கிலோ ரூ.90-க்கும், கேரட் ரூ.50 முதல் ரூ.80-க்கும், பீட்ரூட் ரூ.50-க்கும், பீன்ஸ் மற்றும் அவரைக்காய் தலா ரூ.80-க்கும், உருளைக்கிழங்கு ரூ.60-க்கும், கத்தரிக்காய் ரூ.30 முதல் ரூ.50-க்கும் பச்சை மிளகாய் ரூ.60-க்கும், இஞ்சி ரூ.50-க்கும் விற்பனை ஆனது.

சின்னவெங்காயத்தை பொறுத்தவரை திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், அவினாசி, உடுமலைபேட்டை ஆகிய பகுதிகளில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து சின்னவெங்காயம் வரத்து வெகுவாக குறைந்து விட்டது. மேலும் உள்ளூரில் அறுவடையாகும் வெங்காயம் மட்டுமே திண்டுக்கல் வெங்காய மண்டிக்கு விற்பனைக்கு வருகிறது.

vegetables,prices,onion,navratri,dindigul ,காய்கறிகள்,விலை,சின்னவெங்காயம்,நவராத்திரி,திண்டுக்கல்

அதேபோல் பல்லாரி வெங்காயத்தை பொறுத்தவரை கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இருந்து திண்டுக்கல்லுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. அதன் வரத்தும் குறைந்து கொண்டே போகிறது. சின்ன வெங்காயம் மற்றும் பல்லாரியின் தேவை அதிகமாக இருக்கும் நிலையில், வரத்து குறைந்ததால் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

அதன்படி நேற்று தரமான சின்னவெங்காயம் கிலோ ரூ.110-க்கும், பல்லாரி வெங்காயம் ரூ.60-க்கும் விற்பனை ஆனது. மேலும் முகூர்த்தநாளில் அவற்றின் விலை மேலும் உயரும் வாய்ப்பு உள்ளது. இதை தவிர்க்க இருப்பு வைத்துள்ள வெங்காயத்தை விற்பனை கொண்டு வருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
|
|