Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வேலூரில் 3 நாட்கள் மட்டும் காய்கறிகள் விற்பனை; மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

வேலூரில் 3 நாட்கள் மட்டும் காய்கறிகள் விற்பனை; மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

By: Nagaraj Tue, 30 June 2020 8:38:15 PM

வேலூரில் 3 நாட்கள் மட்டும் காய்கறிகள் விற்பனை; மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் வேலூரில் வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 90,000ஐ கடந்தது. குணமடைந்தோர் எண்ணிக்கை 50,000ஐ தாண்டியது. தமிழகத்தில் இன்று 3,943 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 86,224லிருந்து 90,167ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 2,393 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 55,912ல் இருந்து 58,237ஆக உயர்ந்தது. தமிழகத்தில் இன்று கொரோனாவால் 60 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று ஒரே நாளில் 2,325 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

vellore,3 days,vegetable,sale,notice ,வேலூர், 3 நாட்கள், காய்கறி, விற்பனை, அறிவிப்பு

இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 50,074ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் வேலூரில் மேலும் ஒரு மாத காலத்துக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் நாளை முதல் ஜூலை 31 வரை திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாள்களில் மட்டுமே காய்கறி, மளிகைக் கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இறைச்சிக் கடைகள் திங்கள், புதன், சனிக்கிழமை ஆகிய தினங்களில் மட்டும் செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, தமிழகத்தில் ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் ஜூலை 31 ஆம் தேதி நீடிக்கப்படுவதாக தமிழக அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

Tags :
|
|