Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வேளாங்கண்ணி பேராலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது...போலீசார் தீவிர கண்காணிப்பு

வேளாங்கண்ணி பேராலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது...போலீசார் தீவிர கண்காணிப்பு

By: Monisha Sat, 29 Aug 2020 12:58:23 PM

வேளாங்கண்ணி பேராலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது...போலீசார் தீவிர கண்காணிப்பு

நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்கி வருகிறது. மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த பேராலயத்துக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த பேராலயத்தில் ஆண்டு தோறும் 10 நாட்கள் சிறப்பாக திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் செப்டம்பர் 8-ந் தேதி வரை நடக்கிறது. 7-ந் தேதி அன்னையின் பெரிய தேர் பவனி நடக்கிறது. 8-ந் தேதி அன்னையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா பரவல் காரணமாக தேவாலயத்தில் பக்தர்கள் கூட்டம் கூடி பிரார்த்தனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே இன்று மாலை பக்தர்கள் இல்லாமல் கொடியேற்றம் நடைபெறுகிறது.

velankanni,festival,flag hoisting,police,surveillance ,வேளாங்கண்ணி,திருவிழா,கொடியேற்றம்,போலீசார்,கண்காணிப்பு

இதை நடைமுறைப்படுத்தும் விதமாக மாவட்டத்தில் வேளாங்கண்ணி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் 21 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, 21 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 63 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 1,100 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வேளாங்கண்ணி பகுதிக்கு வரக்கூடிய 8 வழிகளில் 6 வழிகள் அடைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இன்று மாலை 5 மணிக்கு பக்தர்கள் இல்லாமல் அன்னையின் கொடியை தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்து வைக்கிறார். பின்னர் ஆலய வளாகத்தில் கொடி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கொடியேற்றம் நடைபெறுகிறது. இந்த நிகழ்வுகள் பேராலய இணையதளம் வழியாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.

Tags :
|