Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரான்ஸ் அதிபர் மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி வைரலாகி வரும் வீடியோ

பிரான்ஸ் அதிபர் மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி வைரலாகி வரும் வீடியோ

By: Karunakaran Thu, 29 Oct 2020 2:06:06 PM

பிரான்ஸ் அதிபர் மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி வைரலாகி வரும் வீடியோ

முகமதி நபியின் கேலி சித்திரத்தை வெளியிட்ட பத்திரிகைக்கு ஆதரவு தெரிவித்தது மற்றும் இஸ்லாமிய மதத்தை இழிவுப்படுத்தி பேசிய விவகாரத்தில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதனால் உலகின் உள்ள இஸ்லாமிய நாடுகள் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், மேக்ரான் சிலருடன் பேசி கொண்டிருக்கும் போது அவரது முகத்தில் முட்டை வீசி தாக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிரான போக்கு காரணமாக மேக்ரானுக்கு இந்த நிலை ஏற்பட்டதாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

video,french president,egg,islam ,வீடியோ, பிரெஞ்சு ஜனாதிபதி, முட்டை, இஸ்லாம்

இதுகுறித்து ஆய்வு செய்தபோது, அது மார்ச் 2017 ஆண்டு எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அதிபர் தேர்தலுக்கு முன் மேக்ரான் வேட்பாளராக இருந்த போது நடைபெற்றது. அதன்படி, தற்போது வெளியாகியுள்ள வைரல் வீடியோவுக்கும் தற்போதைய சர்ச்சைக்கும் துளியும் தொடர்பில்லை என உறுதியாகிவிட்டது.

வைரலாகும் வீடியோவில் உண்மை தன்மை இல்லை என்பது தெரிய வந்துவிட்டது. போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் நிகழலாம். எனவே உண்மை தன்மையை அறியாமல், போலி செய்திகளை பரப்பாதீர்கள்.

Tags :
|
|