Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி

விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி

By: Nagaraj Mon, 26 Oct 2020 8:22:50 PM

விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி

தமிழகத்தில் இன்று விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளுக்கு எழுத கற்றுக் கொடுக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.

விஜயதசமி அன்று தொடங்கப்படும் எந்த ஒரு செயலுக்கும் வெற்றி கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை ஆகும். இதையொட்டி தங்களது குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க திட்டமிட்டுள்ள பெற்றோர், கோயிலுக்கு அழைத்து வந்து நாக்கில் எழுத்துகளை எழுதியும், பின்னர் குழந்தைகளின் கைகளை பிடித்து அரிசி, நெல் போன்ற தானியங்களில் எழுத வைத்தும் கற்றுக் கொடுப்பது வழக்கமாகும். அதன்படி பல்வேறு கோயில்களிலும் இன்று வித்யாரம்பம் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோயிலில் குழந்தைகளின் நாக்கில் தங்கத்தால் அ, அம்மா என எழுதியும், பின்னர் குழந்தைகளின் கைகளை பிடித்து அரிசியில் ஹரி ஸ்ரீ கணபதாயே என எழுதியும் கற்றுக் கொடுக்கப்பட்டது.

vidyarambam,children,parents,temple,write ,வித்யாரம்பம், குழந்தைகள், பெற்றோர்கள், கோயில், எழுத

பின்னர் தங்களது தாய்மார்களுக்கு குழந்தைகள் பாத பூஜை செய்து ஆசி பெறும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நாகர்கோயில் சரஸ்வதி கோயிலுக்கு குழந்தைகளை அழைத்து வந்த பெற்றோர், அக்குழந்தைகளை மடியில் அமர வைத்து அவர்களின் நாக்கில் எழுதுகோல் போன்ற சாதனத்தால் தேனை தொட்டு எழுத்துகளை எழுதினர். பின்னர் குழந்தைகளின் கைகளை பிடித்து அரிசியில் எழுத வைத்து கற்றுக் கொடுத்தனர்.

இதேபோல் சேலம் சூரமங்கலம் குரங்கு சாவடியிலுள்ள ஐயப்பன் கோயிலில் காலை முதலே குழந்தைகளுடன் ஏராளமான பெற்றோர் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அங்கு வரிசையாக அமர்ந்து, தங்களது மடியில் குழந்தைகளை அமர வைத்து அரிசியில் எழுத வைத்தனர்.

Tags :
|