Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வியட்நாம் இந்தியாவின் இந்தோ-பசிபிக் திட்டத்தின் முக்கிய கூட்டாளி - பிரதமர் மோடி

வியட்நாம் இந்தியாவின் இந்தோ-பசிபிக் திட்டத்தின் முக்கிய கூட்டாளி - பிரதமர் மோடி

By: Karunakaran Tue, 22 Dec 2020 09:05:38 AM

வியட்நாம் இந்தியாவின் இந்தோ-பசிபிக் திட்டத்தின் முக்கிய கூட்டாளி - பிரதமர் மோடி


இந்தியா வியட்நாம் இடையிலான உச்சிமாநாடு காணொலி காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் வியட்நாம் பிரதமர் நுயேன் ஜுவான் புக்கும் கலந்து கொண்டு பல்வேறு பிரச்சனை மற்றும் விவகாரங்கள் தொடர்பாக பேசினர்.

இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் கொரோனா தொற்றை எதிர்கொள்வது, கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்டவை குறித்தும் பிரதமர் நரேந்திர மோடியும் பிரதமர் நுயேன் ஜுவான் புக்கும் ஆலோசனை நடத்தினர்.

vietnam,indias key ally,indo-pacific project,modi ,வியட்நாம், இந்தியாவின் முக்கிய நட்பு நாடு, இந்தோ-பசிபிக் திட்டம், மோடி

அப்போது பிரதமர் மோடி தனது தொடக்க உரையில், வியட்நாம் இந்தியாவின் இந்தோ-பசிபிக் திட்டத்தின் முக்கிய கூட்டாளி என குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், வியட்நாம் இந்தியாவின் கிழக்கு கொள்கையின் ஒரு முக்கிய தூண். இந்தியா வியட்நாமுடனான தனது உறவுகளை நீண்டகால மற்றும் மூலோபாய கண்ணோட்டத்துடன் பார்க்கிறது என்று கூறினார்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவை நமது பொதுவான நோக்கம். பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையும் பேணுவதில் நமது ஒத்துழைப்பு ஒரு முக்கிய பங்களிப்பை செய்ய முடியும் என மோடி தெரிவித்தார்.


Tags :