Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பார்வையிழந்த மதுரை மாற்றுத்திறனாளி மாணவி ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி

பார்வையிழந்த மதுரை மாற்றுத்திறனாளி மாணவி ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி

By: Nagaraj Thu, 06 Aug 2020 07:34:58 AM

பார்வையிழந்த மதுரை மாற்றுத்திறனாளி மாணவி ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி

ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிப் பெற்ற மாற்றுத்திறனாளி மாணவி... இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) தேர்வின் முடிவுகள் (2019) வெளியாகியுள்ளன. இதில் மதுரை சிம்மக்கல் அருகேயுள்ள மணிநகரம் பகுதியைச் சேர்ந்த முருகேசன்- ஆவுடைதேவி தம்பதியரின் மகள் பூரண சுந்தரி தேர்வு பெற்றுள்ளார்.

இவரின் வெற்றிக்குப் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தன் முகநூல் பதிவில், “இவர் ஐந்து வயதில் பார்வை நரம்பு சுருங்கியதால் தனது பார்வையை முழுமையாக இழந்த மாற்றுத்திறனாளி ஆவார்.

உடல் குறைபாடுகளை முயற்சிகளால் முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கையை மெய்பிக்கும் மனிதர்களின் வரிசையில் பூரணசுந்தரியும் இணைந்துள்ளார்.

puranasundari,disabled,congratulations,ias exam,success ,பூரணசுந்தரி, மாற்றுத்திறனாளி, வாழ்த்து, ஐ.ஏ.எஸ் தேர்வு, வெற்றி

அவருக்கு எனது அன்பான வாழ்த்துகள்.அவரின் முயற்சிக்குப் பின்னே அவரது மொத்த குடும்பமும் உள்ளது. அவரை தளராது ஊக்குவித்த அந்த பெற்றோர்களை வணங்குகிறேன்.

தொலைபேசியில் வாழ்த்துச் சொல்ல பூரணசுந்தரியின் தந்தையை அழைத்தேன். அழைப்பை எடுத்த நிமிடத்திலிருந்து எனது நாவல்களை அந்த குடும்பம் எப்படியெல்லாம் வாசித்திருக்கிறது என்று இடைவிடாமல் சொல்லிமுடித்தார்கள். ‘தந்தையை வாசிக்கச்சொல்லி காவல்கோட்டம் முழுமையும் அறிந்துகொண்டேன்’ என்று பெரும் மகிழ்வோடு பகிர்ந்துகொண்டார் பூரணசுந்தரி.

வரலாறு வாசிக்க மட்டுமல்ல... வரலாற்றை உருவாக்கவும் முடியும்... வாழ்த்துகள் பூரண சுந்தரி” என்று வாழ்த்தியுள்ளார்.

Tags :