Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விவசாய கடன்கள் தள்ளுபடி; ஜார்கண்ட் முதல்வர் அறிவிப்பு

விவசாய கடன்கள் தள்ளுபடி; ஜார்கண்ட் முதல்வர் அறிவிப்பு

By: Nagaraj Thu, 24 Dec 2020 2:16:20 PM

விவசாய கடன்கள் தள்ளுபடி; ஜார்கண்ட் முதல்வர் அறிவிப்பு

கடன் தள்ளுபடி என்று விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியை ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்.

மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய மூன்று வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 25 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் போராட்டம் இந்தியா மட்டுமன்றி உலகின் கவனத்தை இந்தியா பக்கம் திரும்ப செய்து உள்ளது.

debt waiver,farmers,jharkhand,will benefit ,கடன் தள்ளுபடி, விவசாயிகள், ஜார்கண்ட், பயன் பெறுவார்கள்

இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இருப்பினும் விவசாயிகள் வேளாண் சட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று கூறி வருகின்றனர்.

இந்நிலையில், விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியை ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் ரூபாய் 2000 கோடி விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் ரூபாய் 2000 கோடி கடனை தள்ளுபடி அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 9,07,000 மேற்பட்ட அம்மாநிலத்தில் உள்ள விவசாயிகள் பயன் பெறுவார்கள் என கூறப்படுகிறது.

Tags :