Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விவசாயிகள் போராட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர் தாக்கப்பட்டாரா ? - உண்மை பின்னணி என்ன ?

விவசாயிகள் போராட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர் தாக்கப்பட்டாரா ? - உண்மை பின்னணி என்ன ?

By: Karunakaran Thu, 03 Dec 2020 12:27:13 PM

விவசாயிகள் போராட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர் தாக்கப்பட்டாரா ? - உண்மை பின்னணி என்ன ?

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் டெல்லியில் கடந்த சில நாட்களாக போராடி வருகின்றனர். இது தொடர்பாக 35 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அதில் சுமூக நிலை எட்டவில்லை.

இந்நிலையில், போராட்டத்தின் போது முன்னாள் ராணுவ வீரர் தாக்கப்பட்டதாக கூறி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வைரல் பதிவுகளில் ராணுவ உடையில் வயதானவர் நிற்பதும், கண் காயத்திற்கு கட்டுப்போடப்பட்ட நிலையில், ஒருவர் அமர்ந்து இருக்கும் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

ex-soldier,attack,delhi,peasant struggle ,முன்னாள் சிப்பாய், தாக்குதல், டெல்ஹி, விவசாயிகள் போராட்டம்

அந்த வைரல் புகைப்படங்களில் இருவரும் ஒரே தோற்றம் கொண்டிருப்பதை கொண்டு, போராட்டத்தில் ராணுவ வீரர் தாக்கப்பட்டு இருக்கிறார் என நம்பி நெட்டிசன்கள் அவற்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த வைரல் பதிவுகளை ஆய்வு செய்தபோது, ராணுவ உடையில் இருப்பது முன்னாள் இந்திய ராணுவ கேப்டன் பிரிதிபல் சிங் திலியன் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் இவர் சமீபத்திய விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. அதன்படி முன்னாள் ராணுவ வீரர் தாக்கப்படவில்லை என்பது தெரிய வந்துவிட்டது.
போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே போலி செய்திகளை பரப்பாதீர்கள்.

Tags :
|
|