Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நெல்லை, தென்காசி மாவட்டங்களின் அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்வு

நெல்லை, தென்காசி மாவட்டங்களின் அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்வு

By: Monisha Fri, 16 Oct 2020 4:59:49 PM

நெல்லை, தென்காசி மாவட்டங்களின் அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்வு

கடந்த சில நாட்களாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 5,941 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 94.30 அடியாக இருந்த பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று மேலும் 7.10 அடி உயர்ந்து, 101.40 அடியாக இருந்தது.

இதனுடன் இணைந்த சேர்வலாறு அணை, மணிமுத்தாறு அணை, கொடுமுடியாறு அணை ஆகிய அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. வடக்கு பச்சையாறு மற்றும் நம்பியாறு அணைகளுக்கு நீர்வரத்து இல்லை.

nellai,tenkasi,dams,rain,flood ,நெல்லை,தென்காசி,அணைகள்,மழை,வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணை நிரம்பி வழிகிறது. இந்த அணைக்கு வருகிற 31 கன அடி தண்ணீரும் உபரி நீராக வெளியேற்றப்படுகிறது. இதேபோல் 132 அடி உயரம் கொண்ட அடவிநயினார் அணையும் இந்த ஆண்டு 3-வது முறையாக நிரம்பி வழிகிறது.

கருப்பாநதி அணையின் நீர்மட்டம் உச்சத்தை எட்டி நிரம்பும் தருவாயில் உள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 77 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 25 கன அடி தண்ணீர் உபரியாக வெளியேற்றப்படுகிறது.

இதுதவிர ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கடனா நதி அணையும் நிரம்பும் தருவாயில் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் நேற்று 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்றும் பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்தது.

Tags :
|
|
|