Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரச்சினையை ஏற்றுக்கொண்டு அதை எதிர்த்து நாம் உறுதியுடன் போராட வேண்டும் - ராகுல் காந்தி

பிரச்சினையை ஏற்றுக்கொண்டு அதை எதிர்த்து நாம் உறுதியுடன் போராட வேண்டும் - ராகுல் காந்தி

By: Karunakaran Thu, 02 July 2020 12:40:32 PM

பிரச்சினையை ஏற்றுக்கொண்டு அதை எதிர்த்து நாம் உறுதியுடன் போராட வேண்டும் - ராகுல் காந்தி

இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் கொரோனா பரவியதிலிருந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. ராகுல் காந்தி அவ்வப்போது பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று உலக மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு நியூசிலாந்தில் பணிபுரியும் அனு ரக்னத், ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் நரேந்திர சிங், இங்கிலாந்தில் பணியாற்றும் ஷெரில்மோள் புரவாடி மற்றும் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் பணியாற்றும் விபின் கிருஷ்ணனுடன் ராகுல் காந்தி 30 நிமிடங்கள் கலைந்துரையாடினார்.

rahul gandhi,coronavirus,corona prevalence,congress ,ராகுல் காந்தி, கொரோனா வைரஸ், கொரோனா பாதிப்பு, காங்கிரஸ்

அப்போது பேசிய அவர், பெருந்தொற்று நோயான கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றும் உன்னதமான பணியில் ஈடுபட்டுள்ள அவர்களை ‘அகிம்சை ராணுவம்‘ என்று சொல்லலாம். மற்றவர்கள் நினைப்பது போல் நிலைமை மோசமாக இல்லை என்ற எண்ணத்தை உருவாக்க அரசாங்கங்கள் முயற்சிக்கின்றன. ஆனால் பிரச்சினையை நாம் உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று நான் கருதுகிறேன் என்று கூறினார்.

மேலும் அவர், கொரோனா பிரச்சினையை ஏற்றுக்கொண்டு அதை எதிர்த்து நாம் உறுதியுடன் போராட வேண்டும். கொரோனா தொற்றால் உயிரிழந்த சுகாதார ஊழியர்களுக்கு டெல்லி அரசு அறிவித்தபடி நிவாரண தொகை வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி அனுப்ப உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags :