Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலக சுகாதார அமைப்புக்கு உரிய நேரத்தில்தான் தகவல்கள் அளித்தோம்; சீனா விளக்கம்

உலக சுகாதார அமைப்புக்கு உரிய நேரத்தில்தான் தகவல்கள் அளித்தோம்; சீனா விளக்கம்

By: Nagaraj Thu, 04 June 2020 10:54:46 AM

உலக சுகாதார அமைப்புக்கு உரிய நேரத்தில்தான் தகவல்கள் அளித்தோம்; சீனா விளக்கம்

உலக சுகாதார அமைப்புக்கு கொரோனா தொடர்பான தகவல்கள்களை தாமதமாக வழங்கவில்லை. உரிய நேரத்தில்தான் வழங்கினோம் என்று சீனா விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து சீன வெளியுறவுத் துறையின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் தெரிவித்ததாவது, ' கொரோனா தொடர்பான தகவல்களை சீனா உலக சுகாதார அமைப்புக்கு தாமதமாக தெரிவித்தது என்று வெளியான செய்தி முற்றிலும் தவறானது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூகான் நகரில் முதன் முதலாக கொரோனா உறுதி செய்யப்பட்டது.

in a timely manner,we provide information,delay,no delay ,உரிய நேரத்தில், தகவல்கள், வழங்கினோம், தாமதம், இல்லை

அதைத் தொடர்ந்து அங்கு தொற்று பரவியது. சில வாரங்களில் பிற நாடுகளுக்கும் பரவியது. அமெரிக்க அதிபர் கொரோனா வைரஸை சீன வைரஸ் என்று கூறினார், வூகான் ஆய்வு மையத்திலிருந்து அது பரவியதாக குற்றம் சாட்டினார்.

கொரோனா பரவல் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், சீனாவில் ஆய்வு செய்ய அமெரிக்க குழுவை அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினார். ஆனால், அவரது கோரிக்கையை சீனா ஏற்கவில்லை. கொரோனா தொடர்பான எந்த தகவல்களையும் நாங்கள் மறைக்கவில்லை உரிய நேரத்தில் அனைத்து தகவல்களையும் முறையாக வழங்கினோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|