Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா வைரஸ் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ள சிறப்பு நடவடிக்கைகள் என்ன?

கொரோனா வைரஸ் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ள சிறப்பு நடவடிக்கைகள் என்ன?

By: Monisha Tue, 30 June 2020 10:22:15 AM

கொரோனா வைரஸ் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ள சிறப்பு நடவடிக்கைகள் என்ன?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் உள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் தற்போது எடுக்கப்பட்டுள்ள சிறப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நோய்த் தொற்றைத் தடுக்க நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. குறிப்பாக, சென்னையில் 15 மண்டலங்களிலும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் தலைமையில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, நோய்த் தொற்று உள்ளவர்களுடன் தொடர்புள்ளவர்களைக் கண்டறியும் பணி மண்டல அளவில் மேற்கொள்ளப்படுகிறது.

அங்கு நோய்த் தடுப்பு பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, அப்பகுதியில் உள்ள ஏழைகளுக்கு முககவசம், வைட்டமின் மாத்திரைகள், கபசுர குடிநீர், சத்தான உணவு போன்றவை வழங்கப்படுகிறது. அவர்களின் வாழ்விடம் நெருக்கமாக இருந்தால், அவர்கள் தனிமை முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.

chennai,coronavirus,infection,solitude camp,madurai ,சென்னை,கொரோனா வைரஸ்,நோய்த் தொற்று,தனிமை முகாம்,மதுரை

நோய்த் தொற்று ஏற்பட்டவர்கள் விபரம் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு, தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இது தவிர, சென்னையில் உள்ள 149 நகர ஆரம்ப சுகாதார மையங்களிலும், 19 மருத்துவமனைகளிலும் காய்ச்சல் சோதனை மையம் செயல்படுவதுடன், 4,925 காய்ச்சல் சோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, நோய் அறிகுறி உள்ளவர்கள் தீவிரமாக கண்டறியப்பட்டு, சோதனை செய்யப்படுகின்றனர்.

இதனால் 19-ந் தேதி முதல் 3 லட்சத்து 36 ஆயிரத்து 836 பேர் காய்ச்சல் சோதனையில் பங்குகொண்டனர். அவர்களில் 15 ஆயிரத்து 119 நபர்களுக்கு கொரோனா தொற்று சோதனை செய்யப்பட்டது. இவர்களில் 3 ஆயிரத்து 189 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் நோய்த் தொற்று முன்கூட்டியே கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதால், உயிரிழப்பு தவிர்க்கப்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் மதுரை மாவட்டங்களிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

chennai,coronavirus,infection,solitude camp,madurai ,சென்னை,கொரோனா வைரஸ்,நோய்த் தொற்று,தனிமை முகாம்,மதுரை

சென்னை மாநகராட்சியில், குறிப்பாக நெரிசலான குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களை முன்னெச்சரிக்கையாக வீடுகள் தோறும் தீவிர ஆய்வு செய்து கண்டறிந்து, பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்களை தனிமைப்படுத்தும் முகாம்களில் குறைந்தபட்சம் 7 நாட்களாவது தங்க வைத்து, அவர்களை நோய்த் தொற்றிலிருந்து காப்பாற்ற ஒரு முக்கிய நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. இவ்வாறு முன்னெச்சரிக்கையாக 8.072 பேர் தனிமை முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனால், சென்னை மாநகராட்சி பகுதிகளில் அவர்களது வாழ்விடத்தில் நோய்ப் பரவல் தடுக்கப்பட்டுள்ளது.

மதுரை பெருநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள சில பகுதிகளிலும் காய்ச்சல் முகாம்கள் தீவிரப்படுத்தப்பட்டு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இதுவரை 931 முகாம்கள் நடத்தப்பட்டு 75 ஆயிரத்து 252 நபர்கள் காய்ச்சல் சோதனையில் பங்குகொண்டனர். இதில் 8,720 பேர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 1,389 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags :