Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டோம் என ரஷியா கூறியதன் உண்மைத்தன்மை என்ன?

கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டோம் என ரஷியா கூறியதன் உண்மைத்தன்மை என்ன?

By: Karunakaran Tue, 11 Aug 2020 6:11:22 PM

கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டோம் என ரஷியா கூறியதன் உண்மைத்தன்மை என்ன?

தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் கடுமையான போட்டி போட்டு வருகின்றன. தடுப்பூசியை முதலில் யார் கண்டுபிடிப்பது என்பது குறித்து ரஷியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி தொடர்பான தகவல்களை திருடுவதாக ஒவ்வொரு நாடுகளும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு, கொரோனா தடுப்பூசி 3 கட்ட மனித சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். 3 ஆம் கட்ட பரிசோதனை குறைந்தது 1 மாதங்களுக்கு மேலான பரிசோதனையாக இருக்க வேண்டும். 1,000 பேருக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு அதன் செயல்திறன் தொடர்பாக முழுமையான வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

russia,corona vaccine,coronavirus,corona test ,ரஷ்யா, கொரோனா தடுப்பூசி, கொரோனா வைரஸ், கொரோனா சோதனை

தற்போது கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதி கட்டத்தை எட்டியிருந்த ரஷ்யா, உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாக அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு தயாராக உள்ளதாக ரஷிய அதிபர் புதின் இன்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவரது அறிவிப்பு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ரஷிய சுகாதாரத்துறை மந்திரி இதுகுறித்து கூறுகையில், மிகப்பெரிய அளவில் கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தும் பணி செப்டம்பர் மாதம் முதல் தொடங்கும். மருத்துவத்துறையினர், அரசுத்துறையினருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்படும். அதன்பின்னர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
|