Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கை பாஜக, ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகிறது - ராகுல் காந்தி

இந்தியாவில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கை பாஜக, ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகிறது - ராகுல் காந்தி

By: Karunakaran Sun, 16 Aug 2020 5:11:14 PM

இந்தியாவில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கை பாஜக, ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகிறது - ராகுல் காந்தி

சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மூவர்ண கொடி ஏற்றி, நாட்டு மக்களுக்கு உரை ஆற்றியபோது, பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினார். அப்போது எல்லையில் வாலாட்டும் சீனாவையும், பாகிஸ்தானையும் சாடும் விதத்தில் பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் மோடி சீனாவின் பெயரை சொல்வதற்கு ஏன் பயப்படுகிறார்கள் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. கொரோனா பரவ ஆரம்பித்ததிலிருந்து பாஜக அரசை காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துவதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

whatsapp,facebook,bjp,rahul gandhi ,வாட்ஸ்அப், பேஸ்புக், பாஜக, ராகுல் காந்தி

இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பத்திரிகையை செய்தியை மேற்கோள் காட்டி, இந்தியாவில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகிறது. சமூக வலைதளங்களில் போலி செய்திகளை பரப்பி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது. ஃபேஸ்புக்கின் உண்மை நிலையை அமெரிக்க ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்துள்ளன என்று பதிவிட்டுள்ளார்.

அவரது ட்விட்டர் பக்கத்தில், BJP & RSS control Facebook & Whatsapp in India.

They spread fake news and hatred through it and use it to influence the electorate.

Finally, the American media has come out with the truth about Facebook. pic.twitter.com/Y29uCQjSRP
— Rahul Gandhi (@RahulGandhi) என்று பதிவிடப்பட்டிருந்தது.

Tags :
|