Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் எப்போது பேருந்து சேவைகள் தொடங்கும்? மக்கள் எதிர்பார்ப்பு

தமிழகத்தில் எப்போது பேருந்து சேவைகள் தொடங்கும்? மக்கள் எதிர்பார்ப்பு

By: Nagaraj Fri, 22 May 2020 10:21:18 AM

தமிழகத்தில் எப்போது பேருந்து சேவைகள் தொடங்கும்? மக்கள் எதிர்பார்ப்பு

கடந்த 50 நாட்களுக்கும் மேலாக பொது முடக்கத்தால் பேருந்து சேவை இயக்கப்படவில்லை. இந்நிலையில் 4வது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதில் பக்கத்து மாநிலங்களில் பேருந்துகள் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் பொது பேருந்து சேவை எப்போது தொடங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது இந்தியாவில் முதல் மாநிலமாக மே 15ல் பேருந்து சேவையை அரியானா தொடங்கியது.

tamil,bus,ap,online,booking,regulation ,தமிழகம், பேருந்து, ஆந்திரா, ஆன்லைன், புக்கிங், விதிமுறை

அதன்பின், பஞ்சாப், குஜராத், கர்நாடகாவை தொடர்ந்து நேற்று ஆந்திராவிலும் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டது.

436 வழித்தடங்களில் 1,683 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சமூக விலகலை கடைபிடிக்க ஏதுவாக பேருந்துகளின் இருக்கைகள் மாற்றி
அமைக்கப்பட்டுள்ளன. ஆந்திராவுக்குள் மட்டுமின்றி, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

tamil,bus,ap,online,booking,regulation ,தமிழகம், பேருந்து, ஆந்திரா, ஆன்லைன், புக்கிங், விதிமுறை

ஒரு பேருந்துக்கு 20 முதல் 30 பயணிகள் அனுமதிக்கப்படுவர்.
மாஸ்க் அணிவதும், சானிடைசரில் கைகளை சுத்தப்படுத்துவதும் கட்டாயம். 58 நாட்கள் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால், ஆந்திரா போக்குவரத்து கழகத்திற்கு சுமார் 1200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனினும் பேருந்துகள் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை.

கண்டக்டர்கள் இருக்க மாட்டார்கள். டிக்கெட்டுகளை ஆன்லைனில் மட்டுமே புக்கிங் செய்து பயணிக்கலாம். இப்படி பல விதிமுறைகளுடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல் தமிழகத்தில் எப்போது பேருந்துகள் இயக்கப்படும் என்று மக்கள் எதிர்பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

Tags :
|
|
|
|