Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தனியாருக்கு அனுமதி அளித்தது ஏன்? தமிழக அரசின் விளக்கம்

தனியாருக்கு அனுமதி அளித்தது ஏன்? தமிழக அரசின் விளக்கம்

By: Nagaraj Thu, 17 Dec 2020 10:16:04 PM

தனியாருக்கு அனுமதி அளித்தது ஏன்? தமிழக அரசின் விளக்கம்

தனியாருக்கு அனுமதி அளித்தது ஏன் என தமிழக அரசு புது விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

தமிழக மின்வாரியத்தில் 30,000 காலிப் பணியிடங்களை தனியார் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வயர்மேன், ஹெல்பர் காலிப்பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களும் தனியார் மூலமே நிரப்பப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மின்வாரிய தலைமை பொறியாளரின் இந்த அறிவிப்பால் ஐடிஐ படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

3 ஆண்டுகளுக்கு பணியாளர்களை நியமித்து கொள்ள மின்வாரியம் தனியாருக்கு அனுமதி அளித்துள்ளது. இந்த தகவல் உண்மை என்றாலும், தனியாருக்கு அனுமதி அளித்தது ஏன் என தமிழக அரசு புது விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

minister,interpretation,electricity,workplaces,private ,அமைச்சர், விளக்கம், மின்வாரியம், பணியிடங்கள், தனியார்

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நடைபெற்ற இளைஞர் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனை கூட்டத்தில் மின்துறை அமைச்சர் தங்கமணி பேசியதாவது:

"அதிமுகவை நோக்கி வரும் இளைஞர் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பை உறுதியாக ஏற்படுத்தி தருவோம். வரும் சட்டமன்ற தேர்தலில் வாட்ஸ்அப் மற்றும் தொழில்நுட்ப பிரச்சாரம் தான் எதிரொலிக்கும். மின்வாரியம் எக்காரணத்தைக் கொண்டும் தனியார் மயமாக்கப்படாது. மின்வாரிய அலுவலகங்களில் 50 சதவீதம் உள்ள காலிப் பணியிடங்கள் மட்டுமே தனியார் மூலம் நிரப்பப்படுகின்றன" என விளக்கமளித்தார்.

Tags :