Advertisement

2014 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது ஏன்?

By: Karunakaran Sat, 12 Dec 2020 09:59:57 AM

2014 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது ஏன்?

கடந்த 2004-ம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று பிரதமர் பதவிக்கு சோனியா காந்தி பெயர் பரிசீலிக்கப்பட்டது. இந்தியர் அல்லாத ஒருவரை பிரதமராக தேர்வு செய்யக்கூடாது என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு காரணமாக அவர் பதவியேற்கவில்லை. அந்த நேரத்தில் கட்சியின் மூத்த தலைவரான பிரணாப் முகர்ஜியின் பெயர் பிரதமர் பதவிக்கு அடிபட்டது. இருப்பினும் யாரும் எதிர்பாராதவிதமாக மன்மோகன் சிங் பிரதமராக அறிவிக்கப்பட்டார்.

தொடர்ந்து 2009 ம் ஆண்டில் நடைபெற்ற பொது தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற போதும் மன்மோகன் சிங்கே பிரதமராக தொடர்ந்து 10 ஆண்டுகள் நீடித்துவந்தார். பிரணாப் முகர்ஜி நிதி மந்திரி மற்றும் உள்துறை மந்திரியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது காங்கிரஸ் சார்பில் பிரணாப் முகர்ஜி நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து 2016-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

congress,2014 parliamentary elections,pranab mukerjee,sonia gandhi ,காங்கிரஸ், 2014 நாடாளுமன்றத் தேர்தல், பிரணாப் முகர்ஜி, சோனியா காந்தி

அதன்பின் 2014ல் நடந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க. அமோகமாக வெற்றி பெற்ற போது, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மோடிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார் பிரணாப் முகர்ஜி. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது 84 வயதில் காலமானார். இந்நிலையில், 2004 பாராளுமன்ற தேர்தலில் நான் பிரதமராகியிருந்தால் 2014 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்திருக்காது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கூறி இருந்ததாக மறைந்த முன்னாள் ஜனாதிபதி எழுதியுள்ள பிரெஸிடென்சியல் இயர்ஸ் என்னும் புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது ஜனாதிபதி பதவிக்காலத்தின் போது நடைபெற்ற சம்பவங்களை குறித்து பிரெஸிடென்சியல் இயர்ஸ் என்னும் புத்தகத்தை எழுதி உள்ளார். இந்த புத்தகத்தில் அவர், 2004-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நான் பிரதமாகியிருந்தால் 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்து இருக்காது என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் என்னிடம் கூறி இருந்தனர். சோனியா காந்தியை பொறுத்த வரையில் கட்சியின் உள் விவகாரங்களை கையாள முடியவில்லை என கூறி உள்ளார். மேலும் தான் பணிபுரிந்த இரண்டு பிரதமர்களையும் - மன்மோகன் சிங் மற்றும் நரேந்திர மோடியை கொண்டும் ஒப்பிட்டு குறிப்பிட்டுள்ளார்.


Tags :