Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோழிக்கோடு விமான விபத்தில் விமானம் தீப்பிடிக்காமல் இருந்தது ஏன் ?

கோழிக்கோடு விமான விபத்தில் விமானம் தீப்பிடிக்காமல் இருந்தது ஏன் ?

By: Karunakaran Sun, 09 Aug 2020 4:05:38 PM

கோழிக்கோடு விமான விபத்தில் விமானம் தீப்பிடிக்காமல் இருந்தது ஏன் ?

கொரோனா ஊரடங்கினால் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள், மத்திய அரசின் ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் சொந்த நாட்டுக்கு அழைத்து வரப்படுகின்றனர். இந்நிலையில் துபாயில் சிக்கி தவித்த 10 குழந்தைகள் உள்பட 185 இந்தியர்கள் மற்றும் 2 விமானிகள், 4 பணிப்பெண்கள் என மொத்தம் 191 பேர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் கேரள மாநிலம் கோழிக்கோடு வந்தனர்.

கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கு அந்த விமானம் வந்து கொண்டிருந்தபோது, பலத்த மழை பெய்து கொண்டு இருந்தது. இதனால் விமானம் தரையிறங்கியபோது, எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையை தாண்டி சென்று அருகில் உள்ள 35 அடி பள்ளத்தில் விழுந்து இரண்டாக பிரிந்தது. விமானம் விபத்துக்குள்ளாகி இரண்டாக உடைந்து விழுந்தும், அந்த விமானம் தீப்பிடிக்காமல் இருந்தது ஏன் என்பதற்கான காரணங்கள் தற்போது கிடைத்துள்ளன.

kerala,plane crash,kozhikode,fire ,கேரளா ,விமான விபத்து, கோழிக்கோடு, தீ

இந்த விமான விபத்துக்கு கோழிக்கோடு விமான நிலையத்தின் அமைப்பே காரணம் என்று கூறப்படுகிறது. விமான நிலைய பகுதியில் பலத்த மழை பெய்ததால் ஓடுதளத்தில் தண்ணீர் இருந்துள்ளது. 10-வது ஓடுபாதையில், அதுவும் நடு பகுதியில் விமானத்தை இறக்கியதால் ஓடுபாதையை தாண்டி விமானம் தடுப்பு சுவரில் மோதி 35 அடி பள்ளத்தில் கவிழ்ந்து இரண்டாக உடைந்து உள்ளது. 3-வது முறையாக தரையிறக்கும்போதுதான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் விமானம் சிக்க வாய்ப்பு இருப்பதாக கருதி விமானத்தின் எரிபொருளை காலி செய்து விடவேண்டும் என்று விமானி முடிவு செய்து, வானில் வட்டமிட்டபடியே எரிபொருளை காலி செய்துள்ளார். இதனால் தான் விமானம் இரண்டாக உடைந்தும் வெடித்து தீப்பிடிக்க வில்லை. மேலும் மழையும் ஒரு காரணம் ஆகும். அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணிந்து இருந்ததும் உயிரிழப்பு பெருமளவில் குறைந்ததற்கு முக்கிய காரணம் ஆகும்.

Tags :
|