Advertisement

தமிழகம் முழுவதும் பரவலாக வடகிழக்கு பருவமழை பொழிவு

By: Monisha Fri, 04 Dec 2020 1:20:22 PM

தமிழகம் முழுவதும் பரவலாக வடகிழக்கு பருவமழை பொழிவு

வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. புரெவி புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆணைக்காரன் சத்திரத்தில் 36செ.மீ. மழை பெய்துள்ளது.

ஒரே நாளில் கொட்டிய மழையால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சிறு குளம், ஏரிகள் நிரம்பி விட்டன. அதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டம் லால்பேட்டை 28செ.மீ, பரங்கிப்பேட்டை 26செ.மீ., சீர்காழி 21செ.மீ., கடலூர் 13செ.மீ., தஞ்சாவூர் 10செ.மீ., புதுச்சேரி 14செ.மீ., திருத்துறைப்பூண்டி 22செ.மீ., நாமக்கல் 17செ.மீ., தூத்துக்குடி 16.5செ.மீ., செய்யாறு 24 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

bay of bengal,storm,monsoon,river,flood ,வங்கக்கடல்,புயல்,பருவமழை,ஆறு,வெள்ளம்

சென்னை மாவட்டத்தில் அம்பத்தூரில் அதிகபட்சமாக 56மி.மீ. மழை பெய்துள்ளது. ஆலந்தூரில் 55மி.மீ., எழும்பூர் 54மி.மீ., பெரம்பூர் 40மி.மீ., அயனாவரம் 36மி.மீ., புரசைவாக்கம் 26மி.மீ., தண்டையார்பேட்டை 9 மி.மீ., மாம்பலம் 23மி.மீ., கிண்டி, மைலாப்பூர் தலா 12மி.மீ. மழை பெய்துள்ளது.

மேலும் செம்பரம்பாக்கம் 8.5செ.மீ., தரமணி 14செ.மீ., மேற்கு தாம்பரம் 11.5செ.மீ., புழல் 30செ.மீ., வடசென்னை 24செ.மீ., சென்னை விமான நிலையம் 14செ.மீ., சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 12செ.மீ., திருச்செந்தூர் 19செ.மீ., எண்ணூர் 24 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Tags :
|
|